பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278


**6 {} கருமை எமக்கே உரிமைஎன் கழறி உரக்க முரலும் ஒவா முழக்கால்: திருவேங் கடவா திருக்கண் மலர்க." ஸ்"ப்ரபாதத்தில் இன்னெரு பாடல் : "ரீபத்மநாப புருஷோத்தம வாஸுதேவ வைகுண்ட மாதவ ஜநார்தக சக்ரபாணே யூரீவத்ஸ்சிஹ் சரணுகத பாரிஜாத யூரீவேங்கடாசலபதே தவ ஸாப்ரபாதம்.' இதன் தமிழ்க்கவிதை வடிவம் வருமாறு : "பற்ப நாபா பரபுரு டோத்தமா! பொற்புடை வாசுதேவனும் புகழுடை மாதவ சர்ைத்தன மலர்க்கை ஆதியாய்! மாதவர் மேவிடும் வைகுந்த பதியே! திருமறு மார்பா சரணவான் தருவே, திருவேங் கடவா திருக்கண் மலர்க!” தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளி எழுச்சியில்’ பாடல் தோறும் 'அரங்கத்தம்மா பள்ளி எழுந் தருளாயே! என்று முடிவதுபோலும், மாணிக்கவாசகர் "திருப்பள்ளி எழுச்சியில் பாடல்கள் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!” என்று இறுவது போலவும், பாரதியின் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியில் ஐந்து பாடல்களும் பள்ளி எழுந்தருளாயே! என்று முடிவது போலவும் திருவேங்கடவன் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களும் திருவேங்க்டவா! திருக்கண் மலர்க ! என்றே இறுகின்றன. * 273. ஸுப்ரபாதம்-22