பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279


2.73 இந்நூலில் இரண்டு பாடல்கள் புருஷகார பூதை யான பெரிய பிராட்டியாரை எழுப்புவதாக அமைந் துள்ளன. அவற்றுள் ஒன்றினைக் காண்போம். “மாதஸ் ஸ்மஸ்த ஜகதாம் மதுகைடவாரே ! வrோ விஹாரிணி மனேகர திவ்யமூர்த்தே பூரீஸ்வாமிகி ச்ரிதஜன ப்ரியதான சீலே யூரீவெங்கடேச தயிதே தவ லாப்ரபாதம்' இப்பாடல், "எல்லா உலகும்ஈன்றளன் அன்ளுய்! பொல்லா மதுகை டபரைப் போக்கிய மாயோன் மார்பமர் திருவே! தேவி! ஆயே! மனங்கவர் ஆர்.எழில் உருவோய்! அண்டினுேர் வேட்பதை அருளிடும் சீலமே! கல்திரு வேங்கட நாயகீ கண்விழி' என்று தமிழ்க்கவிதை வடிவம் பெறுகின்றது. இதன் அடுத்த பாடல் திருமலை நாயகி திருக்கண் மலர்க!” என்று முடிகின்றது. அப்பனை எழுப்பும் பாடல்களில் அன்னையை எழுப்பும் பாடல்களும் கலந்து வருவது ஆண்டாள் திருப்பாவையில் கையாண்ட மரபினைத் தழுவியதாகும்." வைணவதத்துவப்படி புருஷகாரமா யிருப்பவள் பெரிய பிராட்டியார். இத் தத்துவத்தை மேற்கொண்டே ஆண்டாளின் பாடல் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புவதாக அமைந்தது. லாப்ரபாத ஆசிரியரும் திருமலைநாயகியை எழுப்புவதாகப் பாடல் களே அமைத்தார் என்பது ஈண்டு அறியத் தக்கது. இந்த நூலில் இருபத்தொன்பது பாடல்கள் உள்ளன. 274. ஸுப்ரபாதம்-3 275. திருப்பாவை-18 ('உந்துமதகளிற்றன்)