பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281


.5 இதன் தமிழ்மொழி பெயர்ப்பு அருமையாக அமைந் துள்ளது. அதனையும் காண்போம். 'விருப்பாய் சேய்மை வியன்வழி வந்தே திருவடித் தாமரை சேவித்து கின்றேன்; ஒருமுறை உன்தன் காட்சி காணின் திருவடி தன்னைத் தினமும் காணும் அரிதினும் அரிதாம் ஆக்கம் கூடும் அருளினை ஈந்தே, ஆட்கொள்! ஆட்கொள்:” - பாடல் பன்முறை பாடி மகிழத்தக்கது. தேவார மரபினை யொட்டி வடமொழியில் பதினெரு பாடல்களால் அமைந்துள்ளது. ஆனல் தேவாரத்தில் திருக்கடைக் காப்புச் செய்யுளில் பாடினவர் பெயர் காணப்படுவது போல் இப்பதிகத்தில் பாடினவர் பெயர் காணப் பெறவில்லை. (iii) திருவேங்கடவன் திருவடித்துதி : ‘பூரீவெங்கடேச பிரபத்தி என்ற வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு இது. பிரபத்தி என்ற வடசொல் தமிழில் அடைக்கலம்’ என்று பொருள்படும்; வடமொழியில் இது சரணுகதி’ என்றும் வழங்கப்பெறும். திருமங்கையாழ்வாரின் திருவெழு கூற்றிருக்கை சரணு கதி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக ஆழ்வார்களின் திருப்பாசுரங்களின் தத்து வம் சரணுகதியையே அடிப்படையாகக் கொண்டது. அந்த மரபினைப் பரப்பும் ஆசாரியப் பெருந்தகை மண வாள மாமுனிகளின் சீடர்களில் ஒருவர்பாடிய பூரீவெங்க டேச பிரபத்தி சரணுகதி தத்துவத்தைக் கொண்டிருப் பதில் வியப்பொன்றும் இல்லை. இச்சிறுநூல் பதினறு 275. பூர்வேங்கடேச ஸ்தோத்ரம்-பாடல். 10,