பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


17 அண்டர் கோன்அணி யரங்கன்என் அமுதினைக் கண்ட கண்கள்,மற்(று) ஒன்றினைக் காளுவே" என்று பாண் பெருமாள் அநுபவித்த அழகிய மன வாளன் எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசமாகும் இது. உள்ளத்தை உருக்கும் இந்த ஆழ்வாரின் வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று இப்பொழுது நம் மனத்தில் எழுந்து நம்மைப் பரவசப்படுத்துகின்றது. அது கிடக்க, இந்தத் திருவரங்கத்திற்கு மிக அண்மையிலுள்ளதும் தான் தங்கியிருந்ததுமான உறையூரிலுள்ள மாங்காட்டு மறையோன் திருவரங்கத்தை விவரித்துக் கூறுவது மிகவும் பொருத்தமேயாகும். இங்கு திருவரங்கத்தைப் பற்றிய அவன் கூறிய செய்தி ஆறு வரிகளில் மிகச் சுருக் கமாக உள்ளது. ஆனால், அவன் இன்னும் நேரில் கண் டறியாத வேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள் சற்று விரிவாகப் பதினொரு வரிகளில் கூறப்பெற்றுள்ளன. கோவலன் பூம்புகாரில் வாழ்ந்த பெருவணிகன். திரு வேங்கடம் மலைநாட்டைவிட பூம்புகாருக்கு மிக அண்மை யிலுள்ளது. ஆதலின், அவன் வேங்கடத்தைப் பற்றி நன்கு அறிந்திருத்தலும் கூடும். மிகத் தொலைவில் மலை நாட்டிலுள்ள மாங்காட்டு மறையோன் அறிந்திருப்ப தைவிட கோவலன் திருவேங்கடத்தைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் கூடும் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை ; இஃது அறிவுக்குப் பொருத்தமான ஊகமே யாகும். அதுவும் இன்று திருப்பதி புகழ் அடைந்திருப் பதுபோல் அன்றும் அனைவருக்கும் தெரிந்துள்ள ஊராக 17. அமலனாதி பிரான்-பாசுரம் 10. வேங். 2