பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


i8 இருந்திருப்பின், கோவலன் இந்த ஊரைப்பற்றி நன்ருகவே அறிந்திருப்பான் என்றும், அதுவும் தமி ழகத்தின் வட எல்லையின் முக்கியமான ஓர் இடம் என்று அறியும் அளவுக்குத் தெரிந்திருப்பான் என்றும் கருது வது இந்த ஊகத்தை மேலும் வலியுறச் செய்கின்றது. திருப்பதிக்கு நேரில் சென்று அதனைக் கண்டறியாத மாங்காட்டு மறையோன், அவ்வூரைப் பற்றி ஓரளவு நன்கு அறிந்திருக்கக்கூடிய கோவலனுக்கு மிக விரிவாக அத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெரு மானின் திருமேனியை நேரில் கண்டதுபோல் விவர மாகக் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. இது கொல்வத் தெருவில் ஊசி விற்கும் கதை போன்றதாக நினைக்கவும் தூண்டுகின்றது. மேற்கூறியவாறு ஆராய்ந்து முடிவு கூறுகின்ருர் இராவ் சாகிப் k. கோதண்டபாணி பிள்ளை.' இந்த ஆராய்ச்சியின் முடிவு சரி என்று தோன்றவில்லை. காவியப் போக்கினேக் கவனித்தாலும் வேங்கடம்பற்றிய குறிப்பு காவிய நிகழ்ச்சியுடன் எவ்வாற்ருனும் பொருந்து மாறு இல்லே என்பதையும் காட்டுகின்றர். இக்குறிப்பு நிகழ்ச்சிகளுடன் இணையாமல் தனியாகக் கிடப்பதல்ை இஃது இடைச் செருகலாக இருக்கலாமோ என ஐயுற நேர்கின்றது என்றும் சுட்டுகின்ருர், வேங் கடத்திற்கும் அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கும் புகழ் தேடுவதற்காகவே யாரோ ஒருவரால் மேற் கொள்ளப் பெற்ற திட்டம் என்றே கருதுகின்ருர் அந்த அறிஞர். பெருங் கவிஞராகிய இளங்கோவடிகள் தம் 18. வடவேங்கடம் என்ற தலைப்பில் வந்துள்ள egiâçã & liGaytru56i, (Tami! Culture--Vol IX No. 1 Jan-Mar. 1961) -