பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


பிடும் பல பாடல்களைக் காண்பர். கிட்டத்தட்ட தமிழ கத்திலுள்ள எல்லாச் சிற்றுார்களும் விழவு மலிந்திருந்த தாகவே கூறப்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் வரும் விழாக்கள், பருவந்தோறும் வரும் விழாக்கள், சமூக சமய தொழில் அரசியல் பற்றிய பல்வேறு விழாக்கள் ஆண்டுதோறும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதைச் சங்கப் பாடல்களில் கண்டு மகிழலாம். 'வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம்." என்ற புறப் பாட்டடியால் திருமண விழாக்களும், "முந்நீர் விழவின் நெடியோன்." என்பதளுல் கடல் தெய்வத்திற் கெடுக்கப்பெற்ற விழாக் களும் கூறப் பெற்றிருப்பதையும், பரிபாடலில் ஆற்றில் வெள்ளம் பெருகி வருங்கால் மக்கள் அதில் நீராடிப் புதுப் புனல் விழவு கொண்டாடல் குறிப்பிடப் பெற் றிருப்பதையும் காணலாம். புறநானூற்றில் அரசியல் அல்லது போர் விழாக்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன. 'போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்ங்ன்.' (என்னை-தலைவன்; பேரூர்-பெரிய ஊர்; விழவு. போர் செய்தற்கெடுத்த விழா.) என்ற அடிகளில் இத்தகைய விழா குறிப்பிடப்பெற் றிருத்தலேக் காணலாம். . 23. புறம்-372 24. Lipth-9 25. பரிபாடல்-6, 7, 10, 11, 12, 16, 20, 22. இவை வையையைப் பற்றிய பாடல்கள், - 26. புறம்-84,