பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


25 குறுந்தொகையிலும் விழாவினைப் பற்றிய குறிப் புக்கள் காணக்கிடக்கின்றன. 'விழவு முதலாட்டி.' என்ற சொற்ருெடரைக் காண்க. இது தலைவி இல்லறம் நிகழ்த்த வந்த பின்பே தலைவனுக்குச் செல்வம் உண் டாயிற்று என்பதைத் தெரிவிக்கின்றது. 'உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே...... பெருநலக் குறுமகள் வந்தென இணிவிழ வாயிற் றென்னும் இவ் ஆரே.”* என்ற பாடலாலும் தலைவி வந்த பிறகே விழவு அயர்தற் குரிய செல்வநிலை தலைவனுக்கு உண்டாயிற்று என்ப தனக் காணலாம். 'காதலர் உழையராகப் பெரிதுவந்து சாறுகொள் ஊரின் புகல்வேன்." (சாறு-விழா.) இதில் தலைவன் தலைவியுடன் இருத்தலால் விழாக் கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல அவள் மகிழ் கின்ருள் என்ற குறிப்பினைக் காண்க. “இலங்குவளை நெகிழச் சாஅ யானே உளெனே வாழி தோழி சாரல் தழையணி அல்குல் மகளி ருள்ளும் விழவுமேம்பட்டவென் கலனே.” 27. குறுந்-10. 29. குறுந்-41. 28. குறுந்-295 30. குறுந்-125,