பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


33 "பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக் கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும் அத்தம்' - (துறந்த-பெய்யாதொழிந்த புலம்பு உறு-தனிமை மிக்க, கடம்-பாலை நிலம்; காய்விடு-காய் வெடிக்கும் பொழுது; கடுநொடி-கடிய ஒலி; துதை-நெருங்கிய; புறவு-புருக்கள்; இரிக்கும்-நீங்கச் செய்யும்.) என்ற குறுந்தொகைப் பாடலில், கடம் என்ற சொல் பாலேயைக் குறித்தமை காண்க. சிலப்பதிகாரத்திலும்,

  • 衅第8

"கடம்பல கிடந்த காடுடன் கழிந்து. (கடம்-காட்டகத்து நெறி.) என்ற அடியிலுள்ள கடம் பாலை நிலத்து வழியினைக் குறிக்கின்றதனைக் காண்க. கடம்’ என்பதற்கு உரை யாசிரியர் அருஞ்சுரம் என்று பொருள் கூறுவர். பிங் கலந்தை கடம் என்பதனை மலைச்சாரல்’ என்று கூறும். "புறவணி கொண்ட பூநாறு கடத்திடை’’’ என்ற நற்றிணை அடியில், கடம்’ என்பது புதர்கள் அடர்ந்த காடு என்ற பொருளில் வந்துள்ளது. 'வேம்' என்பது எரிதல் என்ற பொருளையுடையது. எனவே, வேங்கடம்' என்பது கொதிக்கின்ற நீரற்ற சுரம் அல்லது மலேச் சாரல்’ என்று பொருள்பட்டுப் பாலை நிலத்தைக் குறிக்கின்றது. கலித்தொகையிலும், 37. குறுந்-174. 38. சிலம்பு, காடுகாண்-வரி 90, 39. நற்றிணை-48,