பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


29 "வெவ்விடைச் செலன்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை அன்னர் இருவரைக் காணிரோ பெரும! காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை ஆண்எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய.'" என்ற பாடற்பகுதியிலுள்ள கடம் என்ற சொல் பாலை நில்ம் என்ற பொருளிலேயே வருகின்றது. இனி, தமிழ் கூறு நல்லுலகத்திற்கு வடக்கேயுள்ள நிலப் பகுதியின் இயல்பினைக் காண்போம். டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் அப்பகுதியின் நில இயல்பினை அடியிற் கண்டவாறு தம் அரிய நூலில் குறிப்பிடுவர். 'கிழக்கு மலைத் தொடர்கள் தமிழகத்தின் வட எல்லேயில் கடற்கரை ஓரமாகச் சென்று கிருஷ்ணை நதி யைத் தாண்டியதும் பல இணைத் தொடர்களாகப் பிரிந்து செல்லுகின்றன. அவற்றுள் கிருஷ்ணை நதிக்குத் தென்பாலுள்ள தொடர்களில் தென் திசையை நோக்கி சென்னைக்கு 13 வடகுறுக்கை (North Latitude) நீண்டு செல்லும் மூன்று இணைத் தொடர்கள் எடுப்பாகப் புலனுகின்றன. அவற்றுள் கடற்கரைக்கு அண்மையி லுள்ள தொடர் கிட்டத்தட்ட நேராகச் செல்லும் ஒரே தொடராக அமைந்துள்ளது. இரண்டாவது தொடர் ஒழுங்கற்ற முறையில் அமைந்த குன்றங்களின் தொகுதி யாகும். அவையும் கிருஷ்ணை நதியை யொட்டித் தொடங்கி கர்நூலுக்குக் கீழ்ப்பகுதியில் சென்று கடப்பை மாவட்டத்தில் அரைவட்ட வடிவமான பகுதி யில் சிதறிக் கிடக்கும் பகுதிகளாகக் காணப்படுகின்றன. 40. கலி-9,