பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


36 கள்; நொடைவிற்ற; நாள் மகிழ் அயரும்நாளோலக்கச் சிறப்புச் செய்யும்; மழபுலம்-மழவரது நிலம்.) புல்லி வீரர் பலருடன் கானகம் சென்று களிறு வேட்டை யாடி, அவற்றின் வெங்கோடுகளைக் கொணர்ந்து அக் கோடுகளையும் அவற்றை விற்றுப்பெற்ற நெல்லுடன் நாளவைக்கண் தன்னைப் பாடிவரும் பரிசிலர்க்கு ஈந்து இன்பம் அடைவான். இங்ங்ணம் இவர்களது செயலால் பிடியினை இழந்த களிறும், களிற்றினை இழந்த பிடியும் அழுது கூப்பிடும் பேரொலி அம் மலையகத்தே மாருது ஒலிக்கும் என்று புலவர்கள் அவனது நாட்டைப் புகழ்ந்து பேசுவர். வேழம் வீழ்த்தும் வன்கண்மையுடையாரது செயல் களேக் கூறிய சங்கப் புலவர்கள் வலக்கை இடக்கை அறி யாத ஆயர்களின் செயல்களையும் புலப்படுத்தியுள்ளனர். 'கோடுயர் பிறங்கல் குன்றுபல நீந்தி வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய குடவர் புழுக்கிய பொன்கவிழ் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் கிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி' |கோடு - சிகரம்; பிறங்கல் - பாறை, புலம் - நாடு; படர்ந்த-அடைந்த வம்பலர்-புதியர்; காய்பசி-மிக்கபசி; திரிய-ஒழிய, குடவர்-இடையர்; புழுக்கிய-ஆக்கிய; புன்கம் - சோறு பகுக்கும் - அளிக்கும்; நிரை-பசுக் கூட்டம்; குழஇேய-மிகப் பெற்ற.) என்ற மாமுலஞர் பாட்டில் அந்நாட்டு ஆயர் தம் நாடு நோக்கி வருவாரை விருந்தாக ஏற்று வரகு அரிசியால் 48. அகம்.393 -