பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


37 அட்ட சோற்றை ஆவின் பாலோடு கூட்டி அவர்க் களித்து வருவிருந்து பார்த்திருக்கும் பண்புடையாளர் என்று போற்றி உரைக்கின்ருர். அவரே இன்னொரு பாட்டில் கூறுவதையும் கேட்போம். 'பயந்தலைப் பெயர்ந்து மாதிரம் வெம்ப வருவழி வம்பலர் பேணிக் கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத் தேக்கிலப் பகுக்கும் புல்லி கன்னடு” - (பயம்-நீர்; பெயர்ந்து-அற்று, மாதிரம்-திசைகள்; வெம்ப-கொதிக்க வம்பலர்.புதியர் (வழிப் போக்கர்); கோவலர்-இடையர், மழவிடை-இளைய எருது; தீம்புளிஇனிய புளிச்சோறு: .ெ ச வி அ ைட - (பசியால்) காதடைப்பு; பகுக்கும்.அளிக்கும்.) பொருள்வயிற் பிரிந்து செல்லும் புதியர் கோடை யின் கொடுமையால் நீர்நிலைகள் எல்லாம் வற்றிப்போன நிலையில், தம் நாட்டின் வழியாகச் செல்லுங்கால் எருது களின் கழுத்தில் கட்டி வைத்த புளிச் சோற்றைத் தேக் கிலையில் வைத்துத் தருவர் என்று ஆயர்களின் விருந் தோம்பும் பண்பினை எடுத்துக் கூறுவர். இங்ங்னம் வீரரும் ஆயரும் கலந்து வாழும் வேங்கட நாடாண்ட புல்லி இரவலர்க்கு இல்லை என்னது ஈயும் வண்மையும், அதனல் வளமார்ந்த புகழும் உடைய வய்ைத் திகழ்ந்தான். அத்தகையவன் அவன் என்று அறிந்த புலவர் பெருமக்கள் அவனைப் பெருகப் பாராட்டினர். - 49. அகம்-31