பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


39 கொண்ட குடியிற் பிறந்தவன் திரையன்; திரைதரு மரபின் வழிவந்தவன். மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்குதானே மூவேந்தரின் சிறப்புடை யவன். நீர்ப்பேர் என்னும் பெயருடையதொரு பேரூர் இவனுக்கு உரியது. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசோச்சிய பெருமகன் இவன். யானைகள் கொணரும் விறகினல் வேள்வி வேட்கும் அந்தணர் நிறைந்த வேங்கட மலேயும் அவன் ஆட்சிக்குட்பட்டது." இவன் வரலாறு குறித்துப் பல்வேறு கருத்துக்களைக் கூறுவர். விரிவஞ்சி அவற்றை யான் ஈண்டுக் கூருமல் விடுக் கின்றேன். . ஆதனுங்கன். இவன் ஒரு குறுநில மன்னன். வேங்கட மலையும் அதனைச் சூழ உள்ள நாடும் இவனுக்கு உரியவை. இவனுக்குப்பின் வந்தவனே புல்லி என்ற அரச வைான். இவன் இரவலர் இன்மை தீர்க்கும் இனிய உள்ளம் படைத்தவன். கள்ளில் ஆத்திரையனர் என்னும் தொண்டை நாட்டுப் புலவர் ஒருவர் இளையராய் இருந்த காலத்தே இவனைச் சென்று கண்டார். தன்பால் வந்த புலவரை ஆதனுங்கன் அன்புடன் வரவேற்று அருகில் இருத்தி 'பிள்ளைப் பொருந, கோடை முற்றி வற்கடம் உற்ற வறுமை மிகு காலத்தே, உறுபொருள் ஈந்து உற்ற துயர் தீர்ப்பாருள் அடியேனையும் ஒருவகை உள்ளு வாயாக" எனச் சொல்லி வேண்டுவன நல்கினன் என்பது வரலாறு, ஆதனுங்கனின் அருங்குணத்தை ஆத்திரையனர் நன்கு உணர்ந்து அவனைத் தம் உள்ளத்தே வைத்துப் போற்றுவாராயினர். அவனை மறப்பதும் அவருக்கு স্পরু 54. பெரும்பான. வரி 29-37; வரி 319, 55. புறம்-389,