பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


43 கிழக்குக் கடற்கரைப் பகுதியையோ அன்று கிழக்குப் பகுதியையோ எட்டியிருத்தல் முடியாது. வேங்கடத்தின் சூழ்நிலை முதலியவை: தமிழ் கூறும் நல்லுலகிற்கு வடபால் உள்ள நாட்டுப் பகுதியும் மேலே குறிப்பிட்ட சங்க காலத்து வேங்கட நாட்டுப் பகுதியும் இயற்கையமைப்பிலும் தட்ப வெப்ப நிலைகளிலும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் காணப்படுகின்றன. அகப்பாட்டில் கூறப்பெற்றுள்ள இப்பகுதியின் இயற்கையமைப்பினைக் காட்டுவேன். "கிலt ரற்று நீள்சுனே வறப்பக் குன்றுகோ டகையக் கடுங்கதிர் தெறுதலின் என்றுழ் நீடிய வேய்படு கனந்தலை நிலவுகிற மருப்பிற் பெருபகை சேர்த்தி வேங்கை வென்ற வெருவரு பணத்தோள் ஓங்கல் யானை உயங்கிமதம் தேம்பிப் பன்மர ஒருசிறைப் பிடியொடு வதியும் கல்லுடை அதர கானம் நீந்திக் கடல்நீ ருப்பின் கணஞ்சால் உமணர் உயங்குபக டுயிர்ப்ப அசைஇ முரம்பிடித்து அகலிடம் குழித்த அகல்பாய்க் கூவல் ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் புடையலங் கழற்காற் புல்லி கடையருங் காணம்' வறப்ப-வரட்சியடைய; அகைய-எரிய, நீடிய-மிக்க; நனந்தலை-அகன்ற இடம்; மருப்பு-கொம்பு; வேங்கைவேங்கைப்புலி, வெருவரு-அச்சம் தரும்; உயங்கிவருந்தி; தேம்பி-வாடி, சிறை-பக்கம்; அதர-நெறிகளை 65, அகம்-295,