பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


47 தின் வடப்புறப்பகுதி வற்கடத்தால் தாக்குண்டு கிடக் கின்றது என்று கூறுவதினின்றும் இதனை அறியலாம். ஒருக்கால் இப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையையொட் டிய ஒன்ருே என்று நினைக்கத் தோன்றுகிறது. கர்நாடகப் பகுதியை யொட்டியுள்ள வளமான இந்துப்பூர், இலே பாக்சி என்ற பகுதிகளை இது குறிப்பதாகவும் கொள்ள லாம். செழிப்புள்ளவைகளாக இருப்பினும் இப்பகுதி களில் சில சமயம் வற்கடமும் தோன்றுகின்றது. வடவேங்கடம்: அன்பர்களே, இதுகாறும் கூறியவை ருல் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வடவேங்கடம் இன்னதென ஒரளவு வரையறை செய்ய முடிகின்றது. தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வடதிசையில் மேற்குக் கடற் கரையிலிருந்து கிழக்குக் கடற்கரை வரையிலுமுள்ள நீண்ட மலைத் தொடர்கள், பொறுக்க முடியாத வெப்பத் துடன் கூடிய காடுகள் சுவடுகள் இவற்றுடன் கூடிய குன்றுகள், சிறுகுன்றுகள் அடங்கிய பகுதியே சங்க நூல் களில் குறிப்பிடப்பெறும் வேங்கடம் என்பது தெளி வாகின்றது. இப்பகுதி மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரை வரை தொடர்பு அருத வட எல்லே யாக அமைந்திருப்பதால் அது "வடவேங்கடம் என்ற பெயருடன் வழங்கிற்று. தொல்காப்பியப் பாயிரமாக அமைந்த "வடவேங்கடம் தென்குமரி' எனத் தொடங் கும் பனம்பாரனர் நூற்பாவில் குறிப்பிடப்பெற்றுள்ள "வடவேங்கடமும் ஏனைய சங்க நூல்களில் குறிப்பிடப் பெற்றுள்ள வேங்கடமும் இப்பகுதியையே குறிக் கின்றது என உறுதியாகக் கூறலாம். இந்த வேங்கடத்தின் சரியான எல்லைகளை வரை செய்து காட்டற்கேற்ற போதுமான சான்றுகள் இல்லை என்பது உண்மையே. ஆயினும், கிடைத்த அளவுள்ள சான்றுகளைக் கொண்டு கிட்டத்தட்ட அதன் எல்லைகளை