பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


48 ஒரளவு அறிந்து கொள்ளலாம். ஒங்கோல் வட்டத்தில் கிருஷ்ண நதிக்கருகிலுள்ள நாட்டின் வடபகுதியை புற நானூற்றில் குறிப்பிடப்பெற்றுள்ள துங்கன்’ என்ற பெயராலும் பட்டத்தாலும் வழங்கிய அரசர்கள் ஆண்டு வந்ததை மேலே குறிப்பிட்டேன் அல்லவா? வேங்கடம் என்ற பகுதி வடதிசையில் கிருஷ்ணை நதிவரையிலுமோ அல்லது ஒங்கோலுக்குத் தெற்கில் கிருஷ்ண நதிக்கும் வடபெண்ணைக்கும் இடையிலுள்ள பகுதியின் பாதிவரை யிலுமோ பரவியுள்ள பகுதிதான் வேங்கடம் என்பதை நிறுவுவதற்கு இக்கருத்து அடிப்படையாக அமைகின்றது. "வேங்கடம் என்ற இப்பகுதி கிழக்குக் கடற்கரையின் அருகில் திருப்பதி மலையிலிருந்து தொடங்குகின்றது என்பது திருப்பதி மலைக்கு வேங்கடம்’ என்ற பெயர் அமைந்திருத்தலே ஒரு சான்ருக அமைகின்றது. சங்க இலக்கியங்களில் வெப்பம் மிக்க பகுதியாகக் குறிப்பிடப் பெறும் வேங்கடத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப் பகுதியின் ஒரத்திலோ இம்மலே இருந்திராவிடில் சிறந்த தமிழறிஞர்களாகத் திகழ்ந்த முதலாழ்வார்கள் இம் மலையை வேங்கடம் என்று வழங்கியிரார். இவர்கள் பாடல்களில் சங்க இலக்கியச் சாயலும் நெறியும் நிழலிடு வதை நாம் நன்கு அறிவோம். சோணுட்டின் வடஎல்லையில் கிழக்குப் பகுதியில் தொடங்குகின்றது. இத் திருப்பதிமலே. இதிலிருந்து வேங்கடம் என்ற பகுதி பாண்டிநாட்டின் வட எல்லையாக நீண்டு மேற்குக் கடற்கரையை எட்டுகின்றது. S S Y S S S S S S S S S S S S S S S S S S S C C S S S வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்" 72, அகம்-27,