பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


50 என்ற இன்ைெரு பாடற்பகுதி இதனைத் தெளிவாக்கு கின்றது. இதில் இன்னெரு தலைவன் அயிரியாற்றைக் கடந்து காடுகளுக்கு அப்பால் செல்லுகின்றன். அவன் செல்லும் நெறியிலுள்ள பக்கமலைகளில் மூங்கில்கள் நிறைந்துள்ளன. அங்குள்ள வெப்பத்தினல் சுரபுன்னே வாடிக் கரிந்த நிலையிலுள்ளது. வழியிலுள்ள கற்குவியல் கள் கதிரவனின் வெப்பத்தை ஏற்று அதனை எல்லாப் பக்கங்களிலும் பரப்புகின்றன. இந்த அயிரியாற்றைத் துங்கபத்திரையின் உபநதியாகக் கொள்வர் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள்". இந்த உபநதி மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பகுதியில் உற்பத்தி யாகிக் கர்நாடகப் பகுதியின் வடஎல்லை வழியாகப் பாய் கின்றது. இங்ங்னம் கிழக்குக் கடற்கரையில் தொடங் கும் வேங்கடம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரம் வரையில் நீண்டு செல்கின்றது. அம் மலையைக் கடந்து சென்ருல் மேற்கிலுள்ள கடல் தென்படும். எருமை நாடு: இனி, மேலே சுட்டிய அகப்பாட் டில்" குறிப்பிட்ட எருமை நன்னடு இன்னதென விளக்கு வேன். மைசூரில் கிடைத்த கன்னடக் கல்வெட்டுகளா syth (EP. Car. Vol X cu 20); அதே இடத்தில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டுகளாலும் (A. R. for 1907, Part) எருமை நன்னடு என்பது கர்நாடக மாநிலம் ஆகும் என்று அறியக் கிடக்கின்றது." தமிழில் எருமை (விலங்கு) என்பது, வடமொழியில் மகிஷம் என வழங்கும். புராணக் கதைப்படி மகிஷா 75. A History Tirupathi-p. 11. g)j, B9 3cirarL-38ả ஹேகரி என்று வழங்குகின்றது. 76. அகம்-253. 77. புறம்-213 உரையில் அவ்வை சு. துரைசாமி அவர் களால் காட்டப்பெற்றவை,