பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


53 ராலும் பாடப் பெற்றமை இவ்வுண்மைக்கு மேலும் அரணுக அமைகின்றது. தொல்காப்பியர் காலத்தில் இப்பகுதியில் பயின்று வந்த செந்தமிழ் காலப்போக்கில், பல நூற்ருண்டுகளில், கன்னடமாக மாறியது. இக் கூறியவற்ருல் தொல்காப்பியர் காலத்தில் மைசூர்ப் பகுதி (தற்காலக் கர்நாடகம்) தமிழ்கூறு நல் லுலகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது என்பதனை யும், அதன் வட எல்லையில் அயிரியாற்றினை அடுத்து வேங்கடம் இருந்தது என்பதனையும் அறிகின்ருேம். ஆகவே, தமிழ்கூறு நல்லுலகத்தின் வட எல்லையாக வழங்கிய வேங்கடம் தென்னிந்தியத் தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் கீழ்க் கோடியிலிருந்து மேல்கோடி வரை பரவியிருந்த பகுதியாகும் என்பதனைத் தெளிவாக அறிகின்ருேம் என்றுகூறி என் முதற்பொழிவினைத் தலைக் கட்டுகின்றேன். வணக்கம்.