பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இடைக்கால இலக்கியத்தில் வேங்கடம்" இரண்டாவது பொழிவு மார்ச்சு 8, 1974 பேரன்பர்களே, வணக்கம். நேற்றைய பொழிவில் தொல்காப் பியத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள வடவேங்கடம் இன்ன தென்பதை ஒருவாறு அறுதியிட்டோம். காலப் போக்கில் வேங்கடம் என்ற சொல்லின் பொருள் எப்படியெல்லாம் மாறியது என்பதை இன்றைய பொழிவில் காட்டுவேன். இந்த மாற்றம் காரணமாக சங்ககால வடவேங்கடம் எப்படியோ மனத்தை விட்டு நீங்கிவிட்டது. சமயச்செல்வாக்கின் காரணமாகப் பரந்து கிடந்த வேங்கடமலைத் தொடர்களை எண்ணிய மனம் குவியத்தொடங்கி, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இன்றைய மலையை மட்டிலும் குறிக்கத் தொடங்கி, அதுவே நிலைபெற்றும் விட்டது. சுவாமி தேசிகனின் பாடலும் இதற்கு முத்தாய்ப்பு வைத்துவிட்டது. 'கண்ணனடி யினஎமக்குக் காட்டும் வெற்பு கடுவினையர் இருவரையும் கடியும் வெற்பு; திண்ணமிது வீடுஎன்னத் திகழும் வெற்பு; தெளிந்தபெருந் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு; 'புண்ணியத்தின் புகல்இது'எனப் புகழும் வெற்பு: பொன்னுலகிற் போகமெலாம் புணர்க்கும் வெற்பு விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு; வேங்கடவெற்பு எனவிளக்கும் வேத வெற்பே." 1. தேசிகப் பிரபந்தம்.82