பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


# 4ல் 59 என்ற பாடல் எத்தனை மனங்கட்கு ஆறுதல் அளிக் கின்றது என்பதை நம்மால் அளவிட்டு உரைத்தல் இயலாதன்ருே ? வேங்கடம்’ என்ற சொல்லின் பொருள் இடைக் காலத்தில் அதிசயிக்கத்தக்க முறையில் வளர்ந்ததற்குத் திருமூலரின் பாடல் ஒன்றும் சான்ருக விளங்குகின்றது வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு கந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாதே." இப் பாடலில் வேங்கடம் என்ற சொல் உடலைக் குறிக்கின்றது. வேங்கட நாதன் வேகும் இயல்புள்ள உடலுக்கு நாதன் ஆகின்ருன். நாதன் ஈண்டு ஆன்மாவைக் குறிக்கின்றது; அத்துடன் நில்லாமல் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக விளங்கும் - அந்தர் யாமியாக இருக்கும் - பரமான்வையும் குறிக்கின்றது வைணவ தத்துவத்தில் சித்தும் (உயிரும்) அசித்தும் (உடல், உயிரற்ற பொருள்களனைத்தும்) எம்பெருமா னுக்கு உடலாக இருப்பதாகக் கூறப்படும். இது சரீரசரீரி பாவனை' என்று வழங்கப்பெறும். இப்போது எல்லோர் மனத்திலும் வேங்கடம்" என்னும் பெயர் ஒரு சொல்லாகவே தென்படுகின்றது. சொல்லிலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த பெயரின் முக்கியத்துவமும் நாளடைவில் மறைந்து விட்டது. ஆயினும், ஒருசொல் நீர்மைத்தாக வழங்கும் பெயரில் பழங்காலத்தின் பெருமையும் சிறப்பும் சேர்ந்தே மிளிர்கின்றது. அப்பெயரில் அச்சத்தை விளைவிக்கும் 5. திருமந்திரம்-232 (உயிர்நிலையாமை)