பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


§§ பழங்கூறு அடியோடு இல்லாதொழிந்தது. வட వామఃు யாக வழங்கும் வடவேங்கடம் என்ற அடையுடன் கூடிய பெயரும் வழக்கற்றுப் போய், வைணவ சம்பிர தாயத்தின் அடையாகிய திரு' என்பது சேர்ந்து 'திரு வேங்கடம்' என்று வழங்கி வருகின்றது. திரு என்பது என்னென்ன பொருள்களிலெல்லாம் வழங்குகின்றதோ அப்பொருள்களெல்லாம் வேங்கடம்’ என்ற பெயருடன் சேர்ந்து ஊருக்குப் பெருமையையும் சிறப்பினையும் அளித்துவிட்டது. மலையின் பெயரில் ஏற்பட்ட இம்மாற் றம் காலப்போக்கில் இச் சிறுமலைக்கு ஏற்பட்ட மாற்றத் துடன், எல்லாவகையிலும் பொருந்துவதாக அமைந்து விட்டது. இதனைப் பின்னர் மேலும் தெளிவாக விளக் குவேன். . இதற்கு முன்னர் மதிப்பிற்குரிய பெருமகளுர் திரு. K. கோதண்டபாணி பிள்ளை அவர்கள், பிற்காலத்தில் இம் மலையில் நேரிட்ட மாற்றத்தைக் குறிப்பிடும் முறையில், பூதத்தாழ்வாரின் இரண்டு பாடல்களைச் சான்றுகளாகக் காட்டி விளக்குகின்ருர். அச்சான்றுகள் பற்றி ஈண்டு ஆராய நேரிடுகின்றது. பூதத்தாழ்வார் இம்மலை ய இளங்கிரி எனச் சுட்டுவதாக அவ்வாசிரியர் கூறுவர். அவர் காட்டும் பாடல் இது: - 'கெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து அறியாது இளங்கிரிஎன்(று) எண்ணி-பிரியாது பூங்கொடிகள் வைகும் பொருபுனற் குன்றென்னும் வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு." இளங்கிரி-சிறுமலை.) o வட வேங்கடம் என்ற அவருடைய ஆங்கிலக் கட்டுரை காண்க. (Tami . 1- fan1961-பக்.88, 89) (Tamii Calture Vol II, No. 1- Jan-Ma, 7. இரண். திருவந், 53,