பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


64 திருமலையை இளங்கிரி என்று வருணிக்கவில்லை என்பது தெளிவு. இரண்டாவது பாடலிலும் ஒரு சமத்காரக் கருத்து வெளியிடப்பெறுகின்றது. தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலேயும் எனப் போற்றப்பெறும் திருமா லிருஞ் சோலேமலை திருவேங்கட மலைகளில் எம்பெரு மான் வைத்துள்ள விருப்பத்தையே தம்முடைய திரு வுள்ளத்திலும் வைத்திருக்கும் திறத்தை ஒரு சமத்கார மாக வெளியிடுகின்ருர் ஆழ்வார். பூரீ வசன பூஷணத் திலும் கல்லும் கனகடலும் (பெரி. திருவந், 68) என்ற படியே இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயி ருக்கும்; இளங்கோயில் கைவிடேல் (இரண். திருவந், 54) என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாக இருக்கும்’ என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டே யாகும் என்பது ஈண்டு அறியத்தக்கது'. ஆழ்வார் எம் பெருமான நோக்கி, மேற்குறிப்பிட்ட இரண்டு மலைகளிலும் நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கின் ருயோ அவ்வளவு மகிழ்ச்சியுடன் என் இதயத்திலும் வாழ்கின்ரு ய் என்று கண்டறிந்த அடியேன், வெள்ளத்து இளங்கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்கிறேன்.” என்கின்ருர் இப்பாடலில். - இதன் கருத்தை மேலும் தெளிவாக்குவேன். 'வெள் ளம் என்பது திருப்பாற்கடல். திருப்பாற்கடல் எல்லா அவதாரங்கட்கும் மூ ல க் கி ழ ங் கா. க இருப்பது. விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சாவதாரங்களும் இதன் மூலமாகவே நிகழ்வதாகக் கொள்ளும் கொள்கை வைணவர்களிடம் உள்ளது. இக்காரணம் பற்றித் திருப் 10. பூர்வசன பூஷணம் - சூத்திரம் 176, 177 (புருஷோத்தம நாயுடு பதிப்பு) -