பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


65 பாற்கடல் இளங்கோயில் எனப்படும்'. திருமலை முதலிய திவ்விய தேசங்களும் அன்பர்களுடைய இதயமு மாகின்ற பெருங்கோயில்களிற் சென்று சேர்ந்து வாழ்வ தற்குப் பூர்வாங்கமாகவே, எம்பெருமான் திருப்பாற் கடலில் வாழ்வதாக ஆழ்வார்கள் அநுசந்திப்பார்களா தலால், அந்த அநுசந்தானத்திற்கு இணங்கத் திருப்பாற் கடலை இளங்கோயில் என்று சொல்லுதல் பொருத்த முடைத்தல்லவா? பெருங்கோயிலிற் சென்று சேர்ந்த பிறகு இளங்கோயிலில் அன்பு இருக்கக் காரணம் இல்லா மையால், எம்பெருமானுக்கும் தமது திருவுள்ளமாகின்ற பெருங்கோயிலில் வாழ்வு அமைந்த பிறகு, இளங்கோயி லாகிய திருப்பாற்கடலில் அன்பு குறைந்து விடும் என்றறிந்த ஆழ்வார், 'பிரானே, அவ்விளங்கோயிலில் நீ வைத்திருக்கும் அன்பினைக் குறைத்துக் கொள்ள லாகாது. என் உள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாக இருந்த தளுல் அதன்மீது அடியேன் நன்றி பாராட்டக் கடவேன். அதன் காரணமாகப் பிரார்த்திக்கின்றேன் - அவ்விடத்தை நீ ஒரு நாளும் கைவிடலாகாது என்று’ என்கின்ருர். இதல்ை, 'பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமளுள கம்பி" 11. இளங்கோயில்-பாலாலயம். இக்காலத்தும் திருக் கோயில்களை பழுதுபார்த்துப் புதுப்பிக்க நேருங்கால் அங் குள்ள எம்பெருமான் திருமேனியைப் பாலாலயப் பிர திஷ்டை செய்வது வழக்கமாக இருப்பதை அறிக. வேருெரு பெருங்கோயிலில் சென்று சேர்வதற்கு உறுப்பாக சிறுகக் கொள்ளும் கோயில் பாலாலயம் ஆகிறது. 12. பெரியாழ், திரு. 5, 4:9, வேங்.-5