பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


73 வேறெந்தக் கடவுளரும் சிறப்பாகக் கோயில் கொள்ளக் கூடாது என்று துணிவதே நூல் வழக்கோடும் உலகவியல் போடும் மாறுபடுவதாகும். ஒரு கடவுளுக்குரியகோயிலில் வேறு கடவுளரைக் காப்பாளராகவும் (rேத்திரபாலக ராகவும்), வழிபடுபவராகவும் அமைக்கும் மரபு உண்டு என்பதை நாம் அறிவோம். எடுத்துக் காட்டாக, திரு வரங்கம் பெரிய கோயிலின் கோயில் காப்பாளருள் விநா யகரும் ஒருவர். அங்ங்ணமே, திருவேங்கடத்திற்கு முருக வேள் கோயில் காப்பாளராகவும், திருமாலே வழிபடுபவ ராகவும் அமைகின்ருர். ' வந்திக்க வந்தனை கொள்ளென்று கந்தனும் மாதவரும் சிந்திக்க வந்தனை வேங்கடநாத' (வந்திக்க-வணங்க; வந்தனை-வணக்கம்; கந்தன். முருகன்; மாதவர் - முனிவர்; சித்திக்க-தியானிக்க வந்தனை-வந்து தோன்றிய்ை.) என்று இம் மரபினைத் தி வ்வியகவி பாடுவதாலும் அறியலாம். இங்ங்னமே திருமாலின் முக்கிய இடமாகச் சங்கநூலான பரிபாடலும், சிலப்பதிகாரமும் கூறும் திருமாலிருஞ் சோலைமலையிலும் முருகனுக்கு இடம் உண்டு. இதனை, -'பஞ்சவர்தம் பங்கங் களைந்தான் பனிரண்டு கையொருவர் பங்கங் களைந்தான் பதி.' என்று அழகர் கலம்பக ஆசிரியர் கூறுவதலுைம் அறியலாம். 20. திருவேங்கடத் தந்தாதி-8 21. அழகர் கலம்பகழ்