பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


78 வடிவமான திருவேங்கட முடையான் திருவுருவைப் புகழ்ந்ததாகும். பொய்கையார் ‘கைய வலம்புரியும் நேமியும்' என்றருளி யிருப்பதையும், குலசேகரப் பெருமாள் மின்வட்டச் சுடராழி வேங்கடக் கோன்' எனக் கூறியிருப்பதையும், திருமங்கை மன்னன் “சுடராழி வலனுயர்த்த மல்லார் தோள் வடவேங்கட வாணன்' என்று துவன்றிருப்பதையும், நம்மாழ்வார் "சீரு எரியும் திரு நேமி வலவா...... திருவேங்கடத் தானே' என்று பணித்திருப்பதையும், பெரியாழ்வார் பெண்கொடி வேய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற்கென்னே விதிக் கிற்றியே என்றருளி யிருப்பதையும் காண்போர்க்கு, இவ்வுண்மை விளங் காமற் போகாது. இவற்றையெல்லாம் யாதோ ஒரு காரணத்தால் புறக்கணித்தாலும், மே ற் கூ றி ய ஐயரிதனுர் வாக்கிலுள்ள, 'ஆழியவன் என்ற தொட ராவது இவ்வுண்மையை நிலைநாட்டாமற் போகாது. இளங்கோவடிகள் கூறிய திருவேங்கடச் சிறப்பு முருகற்கேஉரியதென்று கருதுவது இன்னொரு வழியாலும் பிழையுடையதாகின்றது. திருவேங்கடத்தின் பெரு மையைக் கோவலனுக்குரைத்த மாங்காட்டு மறையோன் தன்னைத் திருமாலடியான் என்று குறிப்பிட்டுத் தான் திருமால் திவ்விய தேசங்கட்கு யாத்திரையாகப் புறப்பட்டவன் என்று கூறிய கதை நிகழ்ச்சியைப் பாடு மிடத்தில் மேற்கூறிய திருமலை வருணனை வருகின்றது. இதனே, 41. முதல் திருவந்-28. 44. திருவாய். 6. 10: 2. 42. பெரு. திரு. 4: 3, 45. நாச். திரு. 1: 1. திருமொழி.