பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


82. இவ்விடத்தில் இன்னேர் உண்மையும் கவனிக்கத் தக்கது. சீநிவாசனது திருமேனியில் நாகாபரணமும் சடையுமுள்ளமையால் அத் திருமேனி திருமாற்கு உரிய தன்று என்று கூறும் செவ்வேள் கட்சியினர் அத் திரு மேனி முருகனுக்குரியது என்பதை நிலைநாட்டத் தவறு கின்றனர். செவ்வேளுக்கு வக்காலத்து வாங்கி அதனைச் கிவபிரானுக்குரியதாக்குகின்றனர். சி. வ பி ர | னி ன் சம்பந்தம் ஒரு பக்கப் பார்வையாகவே உள்ளது. திருவேங்கடமுடையானின் திருமேனி சிவபிரான ஒரு பாற்கொண்டதாக உள்ளது. இந்த அரி-அரன் உருவினையே பேயாழ்வார் சிறப்பித்தார். திருமங்கை மன்னனும், "பிறைதங்கு சடையான வலத்தே வைத்து பிரமனத்தன் உந்தியிலே தோற்று வித்து' என்று அருளிச் செய்தனர். இத்தகைய திருக் கோலத்தை அவ் வெம்பெருமான் கொண்டிருந்ததால், அரியோ அரனே என்ற வாதமுண்டாக, அதனை உடை யவர் தீர்த்து வைத்த செய்தியே குருபரம்பரையில் உள்ளது என்பது முன்னர்க் காட்டப்பெற்றது. திருமலை சிவபிரானுக்குரிய சிறந்த தலமாகக் கருதப் பெற்றிருப்பின் தேவாரம் முதலிய திருமுறைகள் இயற்றிய சிவனடியார்களுள் ஒருவரேனும் அம்மலை சிவனுக்குரியதாகப் பாடியிருப்பர். செவ்வேளின் படை வீடுகளைப் பற்றிப் பாடும் செவ்வேளடியார்களாவது இம் மலையை முருகன் வரைப்பு என்று கொண்டாடியிருப்பர். இரண்டும் இல்லையாதலின், பண்டைக்காலத்திலேயே திருமலை சிவபிரானுக்குக்கேனும் முருகவேளுக்கேனும் 51, பெரிய திரு. 3.4 : 9,