பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


88 அளே முழைஞ்சு, பிரசவாரி-தேன் வெள்ளம்; அருள் செயும்.கொடுக்கும்.) இங்கு ஆண்யானை தன் பெண் யானைக்கு ஒரு தேன் தோய்ந்த மூங்கிற் குருத்தைத் தந்து அதனை மகிழ்விக் கின்றது. இக் காட்சிகளை நினைவிற்கொண்ட கம்பநாடன், சித்திரகூட மலையில் இத்தகைய காட்சியொன்றினைச் சீதைக்கு இராமன் மூலம் காட்டுகின்றன். 'உருகு காதலில் தழைகொண்டு முருகு நாறுசெந் தேனினே முழைகின்றும் வாங்கி, பெருகு சூல் இளம் பிடிக்குஒரு பிறைமருப் பியான, பருக வாயினில் கையில்கின்று அளிப்பன பாராய்." (முருகு - மணம்; நாறு . வீசுகின்ற; முழை - கல் இடுக்கு; பெருகு சூல் - முதிர்ந்த கருப்பம்; மருப்பு - தந்தம்.) 3, . இங்கு ஒர் ஆண் யானை சூல் கொண்டுள்ள தன் இளம் பிடியின்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளது. ஒரு மலேயிடுக்கில் தேன்கூடு கட்டப்பெற்று அடையில் தேன் ததும்பி நிற்கின்றது. தேனிக்கள் அதனைச் சூழ்ந்து மொய்த்துக் கொண்டுள்ளன. ஆண் யானை அண்மையிலுள்ள மரத்தினின்று ஒரு தழைக் கொத்தினை ஒடித்து அதனைக் கொண்டு அம்மழலை வண்டுகளே ஒச்சு கின்றது. பிறகு அந்தத் தேனடையினை அப்படியே அசையாமல் தன் துதிக்கையில்ை வாங்கிச் சூல்நிறைந்து பருகுவதற்கும் சிரமப்படும் தன் பிடியின் வாயில் வைத் 59. கம்பரா. அயோத்-சித்திர-10.