பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைக் காணுங்கால் அவர் முகம் மலரும்: புன்னகை அரும்பும். மகிழ்ச்சி பொங்கும்.

ஏன்? என் உருவில் அவர்தம் அண்ணன் அருமை மகன் பாலசுப்பிரமணியனைக் கண்டார்.

தொடக்கத்தில் அவரை நான் நன்கு அறிந்தேன் அல்லன். அவரிடம் நான் சீறிய நாட்கள் பல. வெகுண்ட நாட்களும் பல. ஆனால் அவர் என் மீது சீறியதே இல்லை.

‘நவசக்தி’ அலுவலகம் இராயப்பேட்டையில் இருந்த

போது காலை பத்து மணிக்குத்தான் வேலைக்குச் செல்வேன்.

நாள்தோறும் காலை ஒன்பது மணிக்கு சுடுசோறு உண்டு விட்டு, இடைவேளைக்கு தோசையும் எடுத்துச் செல்வேன்.

ஒரு நாள் இடைவேளை. திரு. வி. க கீழே இறங்கி வந்தார். அப்போது நான் தோசை தின்று கொண் டிருந்தேன்.

‘'என்ன சாப்பிடுகிறாய்?’ என்று கேட்டார் அவர்.

“தோசை’ என்றேன் நான்.

‘நீ சிறு பிள்ளை. ஏன் தோசை கொண்டு வருகிறாய்? தயிர்சாதம் கொண்டு வந்து சாப்பிடு. அதுதான் உன் உடம்புக்கு நல்லது என்றார்.

என் நலனில் கருத்துகொண்ட, ஆசிரிய பெருமானின் சொல் தட்டுவேனோ?

அன்று முதல் தயிர் சாதம் கொண்டு வரத் தொடங்கினேன்.

‘கவசக்தி'யின் உதவி ஆசிரியனாக இருந்தபோது, பாரதி பற்றி நூல் எழுத வேண்டுமென்ற வேட்கை என்னுள் எழுந்தது. என் உள்ளக் கிடக்கையை என் ஆசிரிய தெய்வத்

viii