பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்தை ஒடுக்கக் கூடியது சமரச சன்மார்க்கமே.

ஏற்கெனவே குவித்த பாவங்கள் எப்படிப் போகும்? அவை போனால் அன்றோ உய்ய வழி?

பாவங்களைப் போக்கவும் வழியுள்ளது சமரச சன்மார்க்கத்தில். செய்த பாவங்களை நினைந்து, நினைந்து உருகி, ஆண்டவனிடம் உள்ளத்தோடும் உண்மையுடனும் முறையிட்டால், உய்வு நிச்சயம் உண்டு. பாவங்கள் விலகிப்போம்.

உய்வின் விளைவு

இந்த உய்வு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவு என்ன?

சமரசத்தை அடித்தளமாகக் கொண்ட புதிய உலகு உருவாகும். புதிய உலகில் பிரிவு பிணக்குகள் இரா, சமய வாதங்கள் இடம் பெறா; குறுகிய மனப்பான்மையால் விளையும் பூசல்கள் மறைந்தே போம். கலகங்கள் குழப் பங்கள் நடைபெறாத ஒரே நிலையான நல்லரசு ஏற்படும்.

சுருங்கக் கூறின் புதிய உலகம் என்ற அமுது தோன்றும். சமரச சன்மார்க்கம் எல்லா முறை கேடுகளுக்கும் தீர்வு தரும். சமதர்மம் தழைத்தால் ஆலம் ஒடி ஒளிந்து, மறைந்தே விடும்.

ஒரு நாடு சன்மார்க்க நெறியைப் பின்பற்றாவிடில் என்ன நடக்கும் என்பதையும் விவரிக்கிறார் திரு. வி. க.*

தற்போதைய உலகின் நடப்புக்களை நோக்கி, அவை களை அவர் கூறியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பது விளங்கும்.

  • சன்மார்க்க சங்கம்’, பக். 284-285. தமிழ்ச் சோலை’ அல்லது கட்டுரைத் திரட்டு - இரண்டாம் பகுதி.