பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டில் வழக்கில் இருந்தது திருத்தொண்டர் தொகை. எனவே சேக்கிழார் இதனைத் தமிழில் நூலாக வடித்தார்.

சேக்கிழார் பெரிய புராணத்தை ஏன் தேர்ந்தெடுத் தார். சமண சமயத்தைக் கண்டிக்கும் பொருட்டே இந்த நூலை தேர்ந்தெடுத்தார் என்பர் பலர். உண்மை இதுவல்ல. சமண சமயத்தைக் கடிதல் பொருட்டு அவர் பெரிய புராணம் எழுதவில்லை. சமணத்திலும் பெளத்தத்திலும் பின் வந்தோரால் புகுத்தப்பட்ட அறிவீனமான செயல் களையே பெரிய புராணத்தில் கடிந்தார் என்பதே உண்மை. அது மட்டுமன்று. இந்து மதத்தில் சாதிமத வேறுபாடுகள் புரிந்து, உயர்வு தாழ்வு வேற்றுமைகள் ஏற்படுத்தி வளர்த் தன: சடங்குகள் பலவும் புகுந்து இந்து சமயத்திற்கு ஊறு விளைவித்தன.இவைகளைப் போக்கவே பெரியபுராணத்தைதமிழ் நாட்டிலே தோன்றிய சிவனடியார் வரலாற்றை சேக்கிழார் பாடினார் என்பதே உண்மை, சேக்கிழார் நாளில் ஜாதி வேற்றுமை உண்டு. ஆனால் பூசலில்லை. தனிப்பட்ட எந்த வகுப்பாரும் தனி மன்றங்களோ அல்லது நிறுவனங்களோ வைத்து, இத்தகைய சாதிப் பூசல்களை வளர்க்கவில்லை. என்றாலும் அமைதியாக இருந்த மக்க ளிடையே சாதி வேற்றுமை சமுதாயத்தில் புரையோடி விடக் கூடாதென்றே சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடினார் என்றால் மிகையாகாது. அத்துடனா? தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, தொண்டு புரிந்த நாயன்மார்கள் அல்லது வேறு பகுதிகளில் இருந்த சமயத் தொண்டர்களை சேர்த்துக் கொண்டனர் என்பது ‘அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கு அடியேன்” என்ற வாக்கு உணர்த்துகிறது.

இதனை சேக்கிழார்,

‘மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல் வனார் அடிசார்ந்த முறைமையோடும்’ என்று விவரிப்பது அவர் பண்பிற்கும் பரந்த மனத்திற்கும் சிறந்த எடுத்துக் காட்டு.

  • திருத்தொண்டர் தொகை பத்தாம் செய்யுள்,
9