பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல் எழுதியதற்குத் தூண்டுகோலாக அமைந்தவர் திரு. கதிர்வேற்பிள்ளை. பெரிய புராணம் (1907-1910) முதன் முதலில் வெளி வந்தது. பின்னர் தனி நூலாக வெளி வந்தது.

அக்கால நிலை என்ன? மக்கள் எப்படி வாழ்ந்தனர்? சாதி, சாதி என்ற கூக்குரல் எங்கும் ஒலித்தது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பூசல்கள் எத்தனை, எத்தனை! பெண்கள் உரிமை மறுக்கப்பட்டு, அடிமைகளென வீட்டிலே அடுப்பங்கரையிலே மட்க வைத்த காலம்; சிலரே ஆலயத்துட் செல்லலாம், சிலர் கோயிலின் வெளிச்சுவர் பக்கம் கூட போகக் கூடாதென தீண்டாமை தலை விரித்தாடிய காலம்: மதமென்ற பெயரில் போராட்டங்கள், கலகங்கள், வாக்குவாதங்கள் மலிந்த காலம். இந்தக் கொந்தளிப்பு நிறைந்து நாட்டை'அலைக்கழித்த காலத்தில் இதற்கொரு மாற்று மிகத் தேவையாயிற்று. அது என்ன?

பல பெயர் தெய்வத்திற்குக் கொடுத்தோம். அதிலும் பூசல். முருகனே சிறந்தவன்; இல்லை, இல்லை! சிவனே சிறந்தவன்; திருமால் போன்ற தெய்வமே இல்லை. “ஏசு தான் உங்களுக்கு வழி காட்டுவார்!’ அல்லா தவிர உங்களுக்கு வேறு கதி ஏது?’ எனப் பல. ஐயப்பாடுகளைப் போக்குவது, மிக அவசியம்; மிக மிக அவசியம். இந்த அறியாமை இருளைப் போக்கத் தேவையானது திருமூலர் வாக்கே.

“ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்’ என்பதை மக்கள் உணர்ந்தே ஆக வேண்டும்-இது மிக மிக அவசியம்.

தொழின் முறையால்-மனு நீதிப்படி, ஏற்பட்டிருந்த வகுப்பு அல்லது சாதியில் புகுந்த, பிறப்பு வழி உயர்வு தாழ்வைப் போக்காவிட்டால் உய்வு வருமா? வராது, வராது, வரவே வராது.

91