பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குக் காரணமென்ன? பின்னர் கலப்பு மணத்தை ஆதரித்து சாதிப் புன்மையை நொறுக்கவா? ஒடுக்கவா?

நீங்களே சிந்தியுங்கள்.

அடிச் சேரர்

மற்றொரு நாயனாரைச் சந்திப்போமா!

சேரமான் பெருமாள் நாயனார்-சேர நாட்டு மன்னன். மன்னனுக்குரிய எல்லாப் பரிவாரங்களும் சூழ வந்தான். எதிரே வந்தான் ஒரு வண்ணன். அவன் தலையிலே ஒரு மூட்டை, மூட்டையிலே என்ன இருந்தது? உழவு மண். மழையில் வண்ணான் நனைந்திருந்தான். மழையிலே மண்ணும் கரைந்து உடல் முழுவதும் வழிந்து இருந்தது. எனவே உடல் முழுவதும் வெள்ளை வெளேரென்று தெரிந் தது. சேரன் ‘எங்கும் சிவனையே காண்பவன்! தம் மு 1 எதிர்ப்பட்ட வண்ணானையா கண்டான்? இல்லை, இல்லை! திருநீறு பூசிய சிவபிரானாகவே தோன்றினான். ஒரே கணம் சேரன் வண்ணான் காலடியில் வீழ்ந்தான்.

வண்ணான் அஞ்சினான்; நடுங்கினான். அலறினான்! என்ன என்று? ‘அடிசேரன்’ என்று அலறினான். எனவே சேரனுக்கு அடி சேரன் என்ற பெயர் வந்தது.*

நாடாளும் மன்னன் எங்கே? அழுக்கைப் போக்கும் வண்ணான் எங்கே? பெருமை எங்கே? உயர்வு எங்கே? தாழ்வு எங்கே?

சிவன் என்னும் அன்பில் எப்படி எப்படி அனைத்தும் கரைந்து மறைந்தன பார்த்தீர்களா?

பசுவைப் பேண்-ஜீவகாருண்யமே தலையாயது

சண்டேசுவரரைக் காண்போமா?

  • நாயன்மார் திறம்’, பக்.10

95