பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடம் கூறினேன். அவரும் எனக்கு உற்சாகம் தந்தார். எப்படி எப்படி விவரங்களைச் சேகரிக்க வேண்டுமென அறிவுரை கூறினார்,

இதன்படி உருவானதே ‘பாரதி லீலை என்ற என் சிறு நூல்.

‘சிறு பையன். அவன் என்னவெல்லாம் பிரசுரிக்க வேண்டுமென்கிறானோ, எவ்வாறு எல்லாம் பிரசுரம் செய்ய வேண்டுமென நினைக்கிறானோ, அவ்வாறே செய்து விடு. மறுக்காதே!’ என்று பெரியவரிடம் சொன்னது. இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

அதே போல் ‘தமிழ் வெறி’ என்ற என் நூலுக்கு மதிப்புரை எவ்வளவு மகிழ்வுடன் எழுதிக் கொடுத்தார்! இவைகளையெல்லாம் மறக்க முடியுமா?

நாள்தோறும்

பாம்பன் சுவாமி சமாதி வரை நடந்து செல்வோமே! அப்போது நான் அவரிடம் கேட்டவை எத்தனை எத்தனை! இடையில் நான் குறுக்குக் கேள்விகளும் கேட்பேன், அவை களைக் கேட்டு கோபங் கொள்ளவே மாட்டார். ஆணித்தர மான, ஐயம் தகர்க்கும் விடைகள் வரும். எங்கள் உரையாடலில் அரசியல் இடம் பெறும்; சீர்திருத்தம் வரும். இலக்கியம் வரும். சமயமும் வரும். இப்படி எத்தனையோ!

அது மட்டுமா! இன்றும் பலர் நீங்கள் திரு. வி. கவின் தத்து மகன் அல்லவா? அவர் உங்களைப் பற்றி அப்படித் தானே கூறுவார்?’ என்று கேட்கும்போது என் நெஞ்சு விம்மும். என் ஆசிரியர் மட்டுமா திரு. வி. க!!!

ஒரு முறை பண நெருக்கடி; மற்றும் பல தொல்லைகள் காரணமாக, நவசக்தி சற்று வேகந் தளர்ந்து ஓய்ந்து, சிறிது காலம் உட்கார்ந்து விட்டாள்.

ix