பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபிரானே அவர் தந்தை ஆனார். விசாரசருமன் சண்டேசுரர் ஆனார்.

என்னே! ஜீவகாருண்யத்தின் சக்தி!!! இல்லறத்திலே தன்னடக்கம்

தில்லை நகர் வேட்கோவன் துர்த்த ராகித் தீண்டிலெமைத் திரு-நீல கண்டமென்று சொல்லு மனையாள் தனையே அன்றி மற்றுக் துடியிடையாரிடை யின்பக் துறந்து மூத்தங் கெல்லையி லோடி இறைவைத்து மாற்றி காங்கள் எடுத்தில மென்று இயம்புமென இழிந்து பொய்கை மெல்லிய லாளுடன் மூழ்கி இளமை எய்தி விளங்கு புலிச்சரத்தரனை மேவினாரே.

தில்லை நகரிலே ஒரு சிவனடியார். குயவர் குலத்தினர். அடியவர்களுக்குத் திருவோடு கொடுப்பது அவர் தொண்டு. சிவபெருமான் பெயரால் ‘திருநீலகண்டம், திருநீலகண்டம்’ என்று சொல்லி வந்ததால் திரு நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.

அவர் மனைவியும் அவருக்கேற்ற மனம் படைத்தவரே. ஒரு நாள், எப்போதும் போல் பரத்தை இல்லம் சென்று வந்தார். கணவனிடம் கடுங்கோபமுற்றார் அம்மையார். கணவன் தன் மூர்க்கத்தை அவள் மீது செலுத்த நாயனார் எண்ணிய போது அம்மையார்,

‘நீர் எம்மைத் தீண்டுவீராயின் திரு நீலகண்டம்!’ என்றார்.

அவ்வளவே! எம்மை’ என்று சொன்னவர் மனைவி. ‘எம்மை பன்மை; பெண்ணினத்தையே குறிப்பது எனக் கொண்டார், திரு நீலகண்டர். “இனி பெண்களையே தீண்டுவதில்லை, என உறுதி கொண்டார் திரு நீலகண்டர். எத்தகையவர்? இளைஞச்: சபலமுள்ளவர். பின் என்ன செய்தார்? மனவுறுதி கொண்டு, அதன் வழியே நடந்தார்.

97