பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றார் வள்ளுவர்.

பொய்யாமொழியார் கூறியபடி, இடைக்குலத்தை சேர்ந்தவர் திருமூலர். அவர் வாக்கைத் தவிர்க்க வேண்டும் என்றால், அது எத்தகைய மடமை? அவ்வாறாயின் கண்ணனின் கீதையைப் படிக்கப் புகுவோமா?

இடைச்சாதி இழுக்காரோ? பெண்ணினமே போற்றி சிவனடியே போற்றி,போற்றி!!

பெண் சிவனடியார்களும் உண்டு. அவர்கள் இறைவனுக்குச் செய்த தொண்டில், ஒரு குறைவும் காணவே முடியாது, இது உறுதி, உறுதி, உறுதி!!

அத்தகையோரில் காரைக்கால் அம்மையார் ஒருவர். அவரைப் பற்றி திரு.வி.க. தனி திருமுறை எழுதினார்.

ஒரு பெண். அடக்கத்தின் இருப்பிடம். உறுதியின் சிகரம்; உறுதி பிறந்திட்டால் ஒரு பெண் எவ்வளவு உயர்ந்து விடுவாள் என்பதற்கு காரைக்கால் அம்மையார் வரலாறே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அதே போன்று மங்கையர்க்கரசியார் பெருமையை யாரே வர்ணிக்கக் கூடும்?

காரைக்கால் அம்மையார் இ ல் லத் தர சி ேய; கணவனுக்கு மனமிசைந்த மனைவி. இறைவன் திருவருளால் பெற்றார் மாங்கனி. இந்த மாங்கனியைக் கண்டு பயந்தான் கணவன். மருண்டான்; ஏன்? இவள் சாதாரண பெண்ணல்ல; ‘தெய்வம் இது என்று அச்சமுற்றான்.

மனைவியை விட்டகன்றான். பாண்டி நாடு சென்றான். வேறொரு பெண்ணை மணந்தான். தான் பெற்ற பெண்ணுக்கு தன் முதல் மனைவி பெயரையே சூட்டினான்.

1 90