பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் கணவனை நாடி வந்தார் காரைக்கால் அம்மையார். கணவன் அவள் காலடியில் வீழ்ந்து வணங்கினான். தத்துவ ஞானி அம்மையார் பேய் வடிவம் கொண்டார். ஏன்? தன்னை நிராகரித்த நாயகனையும் பிரியக் கூடாது; தான் வாழ்வது மற்றவர்க்குத் தெரியக் கூடாதென உறுதி பூண்டார் அம்மையார். பேய் வடிவங் கொண்டார்.

அம்மையாரின் உறுதிதான் என்னே!

‘அன்றுக் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்

இன்று திருவுருவங் காண்கிலேன் என்றும் எவ்வுருவோன் தும்பிரான் என்பார்க்

கென்னுரைக்கேன் எவ்வுருமோ கின்னுருவ மேது.’

காரைக்கால் அம்மையார் எவ்வாறு கணவனைப் பிரியாதிருந்தாரோ, அதே போன்று கணவன் நின்ற சீர் நெடுமாறன் பாண்டியனை சிறிதும் பிரியவில்லை மங்கையர்க் கரசியார். பாண்டியனுக்கு கூன்.பாண்டியன் என்ற பெயருண்டு. கூன்.பாண்டியன் சமணத்தை பின்பற்றினான். மங்கையர்க்கரசிக்கோ சைவசமயத்தில் பற்றுண்டு. ஆயினும் கணவனுக்காக தன் சமயத்தை மாற்றிக் கொண்டாரா? இல்லை, இல்லை! சைவ செம்மல் திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது, சைவ சமயத்தை அங்கு நிலை நாட்டிய பெருமை மங்கையர்க்கரசியாரையே சாரும்.

‘நாயன்மார் செய்து வந்த திருத் தொண்டில் பெரிதும் நாயகிமார் துணை செய்தனர். பெண் மக்களின் உதவியின்றி எக்காரியமுஞ் சித்தி பெறாது. மங்கையர்க்கரசியார் ஒருவர் உழைப்பில்லாவிடில் சைவ சமயமெங்கே? சிவனடியார் எங்கே?’ என்று எழுதினார் திரு. வி. க.”

நாயன்மார் உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியவற்றை காத்து வந்தனர். தாம் கொண்ட வீடு

நாயன்மார் திறம்’, பக். 27.

A 440-7 101