பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போதும் திரு. வி.கவைப் பார்த்தேன்.ஆனால் அவர் அது குறித்து ஒரு வார்த்தை கூட என்னைக் கடிந்தார் இல்லை.

‘தம்பி! சோர்வடையாதே! மிகவும் ஒடி விட்டாள். சற்று நிற்கிறாள்; சோர்வு போன பின், பிடிப்பாள் ஒட்டம்! என்று என்னைத் தைரியமூட்டினார். அதுவும் பலித்தது.

சில நாட்கள் கழித்து தனியாக கவசக்தி நடத்த முற்பட்டேன்; வெற்றியும் ஒரளவு கண்டேன். பின்னர் அப்பத்திரிகை, மூத்த மூதறிஞர், பத்திரிகாசிரியர் அமரர் திரு. டி. எஸ். சொக்கலிங்கத்திற்காக திரு. காமராஜ் அவர் களுக்குக் கொடுக்கப்பட்டது.

ஒரு நாள் உரையாடலின் போது “ஐயரவர்கள் தமது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடுகிறார். தாங்களும் தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் என்ன?’ என்று திரு. வி. கவை கேட்டேன்.

“அது வேண்டாம் தம்பி என மறுத்தார் தமிழ்த் தென்றல்.

‘காரணமென்ன?” ‘தமது வரலாற்றைத் தாமே எழுதுவது நமது முன்னோர் மரபு அன்று’ என்றார்.

‘முன்னோர் செய்யாத பல இன்று செய்கிறோம். நம் முன்னோர் பத்திரிகை நடத்தினரா?’ என்று கேட்டேன்.

அவர் புன்னகை புரிந்தார். வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும்’ என்று வற்புறுத்தினேன்.

ஒரு நாள் சீறவும் செய்தேன். ‘பிற்காலத்தில் உங்களைப் பற்றிப் பல .ெ ப ா ய் யு ைர க ள் கூறுவர்; தவறான செய்திகள் பல பரப்பப்படும். அவைகளைப் பொய்ப்பிக்கும்

X