பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதவில்லையா? ஏதேதோ மிகையாகக் கதைக்கிறீரே என ஆங்கில ஈடுபாடு உடைய சிலர் கேட்கலாம்.

அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லலாம். திரு.வி.க வாழ்க்கைக்குறிப்பை தாமே வலிந்து எழுதவில்லை என்பது உண்மை. பல அன்பர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி பின் எழுதத் தொடங்கினார்.

அப்போது அவர் நிலை தான் என்ன?

அவர் முதுமையில் நலங்குன்றியிருந்த காலம் அது.

நலிந்த உடல்; குன்றிய பார்வை. எனினும் தடுமாறாத நினைவு; இதுவே இந்நூலின் சிறப்பு.

இந்நூலை எழுதியதற்குக் காரணமுங் கூறியிருக்கிறார் திரு.வி.க. தம் அணிந்துரையில்,

தமிழ்க் கடலின் அலைகளில் நீந்துவோமா?

‘எனது வாழ்க்கை பல இயக்கங்களிலும் தொண்டு களிலும் ஈடுபட்டது. அவைகளில் நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும்; தீய நிகழ்ச்சிகளும் இருக்கும். நல்லன கொண்டும் தீயன விலக்கியும் மற்றவர் வாழ்தற்கு, எனது வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாதல் துணை புரியும் என்னும் நம்பிக்கை இதை எழுதுமாறு என்னை உந்தியது.’

‘எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து எவ்வுயிரும் பொதுவெனுந் தெளிவு தோன்றித் தம் உயிரே பிற உயிரும் என்னும் உணர்வு பொங்கித் தொண்டு செய்யும் அன்புச் செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ, அவர் வாழ்க்கை வெற்றி உடையதென்றும், மற்றவர் வாழ்க்கை தோல்வி உடையதென்றும் எனது கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, அனுபவம் முதலியன எனக்கு உணர்த்துகின்றன.

  • பகவத் கீதை-பக்தி யோகம்.3, 4 ஸ்லோகங்கள்

கூறுவதையும் படித்து, ஒப்பிடுக.

107