பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது வாழ்க்கையில் அந்தண்மை இடம் பெற்றதா? இல்லையா? இதற்குச் சோதனை வேண்டும். என் வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவரின் சோதனைக்கு வழி ஏற்படும்’ என்கிறார் தமிழ்த் தென்றல் தமது அணிந் துரையில்.’

தொழிலாளர் சிலர் அவரை அணுகி இந்நூல் எழுதிய போது ஒரு விண்ணப்பஞ் செய்தனர். அது என்ன? நூலை புலவர்க்கென்று எழுதாதீர்கள்-எங்கட்கென்றும் எழுதுங்கள் என்று விண்ணப்பஞ் செய்தனர்.*

ஏட்டுப் படிப்பா? அனுபவக் கல்வியறிவா?

எம்.ஏ.,பி.ஏ. என்ற பட்டம் தான் கல்வி என நினைக்கும் இக்காலத்தில் ‘திரு.வி.க என்ன பட்டம் பெற் றார் என்ற கேள்வி எழும்.

வெறும் முதுகலைப் பட்டமோ அல்லது வேறு பட்டமோ ஆழ்ந்த கல்வியறிவைக் கொடுத்து விடாது. அறிவு வளர வேண்டுமானால், அதைப் பெறுவதற்கான உழைப்பு வேண்டும்; சிரத்தை வேண்டும்; முயற்சி வேண்டும்; தீரா அறிவுப் பசி எப்போதும் இருத்தல் வேண்டும். கடின உழைப்பு உடன் அமைதல் வேண்டும். இன்றேல் பட்டங்கள் மட்டும் பெறலாம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழிப்படி.

விளையும் பயிர்

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது முதுமொழி.

பிற்காலத்தில் திரு.வி.க. சிறந்த அறிவாற்றல் படைத்

தவராக இருக்கப் போகிறார் என்பதற்கு அறிகுறியாக

  • அணிந்துரை-வாழ்க்கைக் குறிப்பு-கங். * வாழ்க்கைக் குறிப்பு, பகுதி 1, பக். கூ.
08