பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காலையில் சில மாணாக்கர் என் வீட்டுக்கு வருவர். அவருடன் யான் தோட்டங்கட்குப் போவேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தோட்டம் எங்களை அழைக்கும். தோட்டத் தில் நாங்கள் பலவாறு பிரிந்து பிரிந்து ஆடுவோம். சிலர் ஏற்றமிறைப்பதிலும் கவலையடிப்பதிலும் தலைப்படுவர். இவ்விரண்டிலும் என் மனஞ் செல்வதில்லை. யான் கிடங்கு களில் நீத்தியெடுத்து இறைத்துப் பார்ப்பேன்; வெற்றிலை கிள்வோருடன் சேர்ந்து கொள்வேன்; வாழை அறுப்பதில் கருத்துச் செலுத்துவேன். வாழை பூக் கொய்வதிலும் தண்டு உரித்தெடுப்பதிலும் எனக்கு வேட்கை அதிகம். அகத்திக் கிளைகளை வெட்டிசி சாய்த்து கீரைக் காம்புகளை சுமையாகக் கட்டுவதில் இறங்குவேன்.'”

சிறுபிள்ளை விளையாட்டிலே வேலைகளும் இடம் பெற்றன. பிற்காலத்தில் தொழிலாளர் படைத் தலைவனாக ஆதற்கு முதல் அறிகுறியாக இவ்விளையாட்டுக்கள் அன்றோ எடுத்துக் காட்டின!

விளையாட்டும் வினையும்

அதுதான் போகட்டும். வேறு விளையாட்டுகளும் அவர் பிள்ளைமை பிராயத்தில் இடம் பெற்றன. சிவலிங்கம் மணலில் செய்து விளையாடினார். இது எதற்கு முன் அறிவிப்பு? பிற்காலத்தில் அவர் பெரிய புராணம் எழுதப் போவதற்கு!

பூசலார் என்பவர் ஒரு சிவனடியார். சிவபிரானுக்குக் கோயில் கட்ட நினைத்தார். கையிலோ காசில்லை; தயங்கினாரா? இல்லை, இல்லை. கற்பனையில் கோயில் கட்டினார்; அதற்கென கும்பாபிடேக நாளையும் குறித்தார்.

அதே நாள்; பெரிய மன்னன் ஒருவன் நிறைய நிதி கொட்டி கட்டிய சிவன் கோயிலுக்கு கும்பாபிடேகம் செய்ய

  • திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்-பிள்ளைமை

பக், 85.

1 1 0