பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர முதலியாருடன் சேர்ந்து திருக்குறள் படித்தார், நுட்பங்களை இராயப்பேட்டை திருக்குறளார் விளக்கக் கேட்டார். தம் அறிவில் நிலைக்கச் செய்தார். அவ்வப்போது அவருக்கெழுந்த ஐயப்பாடுகளைத் தெளிவு படுத்தியவருள் சாமி வேதாசலமும் (மறைமலையடிகளும்) ஒருவராவர்.

கம்பராமாயணமும் வில்லிபாரதமும் அவரைக் கவர்ந்தன. அராய்ச்சியில் ஈடுபட்டார். இவருடைய இவ்வாராய்ச்சியில் கலந்து கொண்டவர் தேவப்பிரசாதம் பண்டிதராவார்.

எந்த ஒரு பொருள் எடுத்துக் கொண்டாலும் அது பற்றித் தெளிவாகத் தமிழ்க் கடலால் கூற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் திரு. வி. க.ஒவ்வொரு பொருள் பற்றியும், அது பற்றி ஆய்ந்தறிந்த பெரியோருடன் ஆராய்ச்சி செய்ததே!*

தமிழில் மட்டுமா அறிவை வளர்க்கப் பெரியோரை நாடிச் சென்றார்?

வடமொழியிலும் கருத்து செலுத்தினார். பாம்பன் குமரகுருகுஹதாச சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் ஒருங்குண்ட பெருமேகம்; அறிவு மலை; மெய்ஞானத்தில் இமயம் போன்றவர்: உபநிடத கருத்துக்களைக் கூறுவதில் வல்லுநர். இந்தப் பெரியாரிடம் உபநிடதம் கேட்டார் இராயப்பேட்டை முனிவர். செவியால் கேட்டதை மனத்தில் என்றும் அழியாமல் பதித்தார்.

மற்ற நூல் விளக்கவுரைகளையும் தவிர்க்கவில்லை திரு. வி. க. மருவூர் கணேச சாஸ்திரியார் நூல் விளக்கவுரை நடக்குமிடங்களில் எல்லாம் திரு. வி. க நிச்சயம் இருப்பார்.

தெலுங்கு அறிவுக்கு என்ன செய்தார்? திரு. வி. கவுடன் வெஸ்லி கல்லூரியில் பணியாற்றினார் ஒரு தெலுங்குப் பண்டிதர். அவர் பெயர் கிருஷ்ணமாச்சாரியார் என்பது.

  1. ang குறிப்பு, பக். 107-கல்வி.

1 I &