பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்கு மொழியில் பேரறிஞர். அவருடன் தமிழ்க் கடல் தெலுங்கு மொழிக் கடலில் நீராடியது: நீந்தியது: முத்துக் குளித்தது.

இத்துடன், கடலங்குடி நடேச சாஸ்திரியாரின் மொழி பெயர்ப்பு நூல்களும் அறிவுக் கண்களைத் திறந்தன. ஆங்கிலம்

மெட்ரிகுலேசனே படித்த திரு. வி. க ஆங்கில மொழி யிலும் கவனம் செலுத்தினார். ஏன்? மேல்நாட்டு உள்ளக் கிடக்கைகளையும் அறிய வேண்டும் என்பதற்காக. இதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் சச்சிதானந்தம் பிள்ளை ஒருவர். மற்றவர் மதராஸ் டைம்ஸில் இருந்த கிளின் பார்லோ என்பவர். அத்துடனா? பிரம்ம ஞான சமாஜத்தில் அன்னி பெஸன்ட் அம்மையாரின் தொடர்பு அம்மொழியில் வல்லமையை அதிகரித்தது. கீதாஞ்சலியை இயற்றிய தாகூரின் கவிதை அவரை ஈர்த்தது. பாலி மொழி

ஜைன மத மடங்களில் சாக்கிய பெளத்த சங்கத்தின் நடத்துநர்களின் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் மூலம் திரிபிடகமும், வேறு பாலி மொழியிலிருந்த நூல்களையும் அறிந்தார். பெளத்தத்தின் மூல நூல்களை ஆராய்ந்தார்.

அதே போலத்தான் ஜைன நூல்களையும் ஆராய்ந்து தெளிந்தார்.

அரபி மொழி ஞானம் வேண்டுமே. அதற்கென்ன செய்வது? அதற்கும் ஒருவர் ஏற்பட்டார். அவரே அப்துல் கரீம் என்பவர்.

இது போன்று அவர் கல்வி பள்ளி அறைக்குள் அடை பட்டு இருக்கவில்லை. வையமே கல்விக் கூடமாக மாறியது.

அறிவுச் சுடர் விட்ட இடமெல்லாம் பறந்து சென்றார். வல்லுநர் தம் வாய்மொழி கேட்டார்; அவை தம் நினைவை

114