பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டு அகலாது மனத்தில் பூட்டி வைத்தார். சமயம் வரும் போது கல்வி திடீரென குதிப்பாள்; சிரிப்பாள்; கும்மாளம் போடுவாள்.

தகுதிகளைத் தேடி, தெரிந்து, உணர்ந்து, தெளிந்து, மனத்தில் நிலையாக நிறுத்தி இருத்தியதாலன்றோ இன்று திரு. வி. கவின் திறனை பற்பல துறைகளில் காண்கிறோம்!

கற்றலும் கேட்டலும்

அவர் என்ன கூறுகிறார் கேட்போமா?

‘யான் கற்றன. சில; கேட்டன. சில. இரண்டும் எனக்கு ச் செல்வம் ஆயின. பொருட் செல்வம் பெறாத எனக்குக் கல்விச் செல்வம் சிறிது வாய்த்தது. இச்செல்வத்தை யான் பெறாதிருப்பேனேல் என் வாழ்வு என்னவாகியிருக்கும்? கல்விச் செல்வம் என்னை தொண்டனாக்கிற்று: தமிழ்த் தொண்டன் ஆக்கிற்று!

‘யான் பெற்ற கல்விச் செல்வம் பல மொழிப் பொருள் களினின்றும் திரண்டது. பல மொழிக் கருத்துக்கள் என் உள்ளத்தில் ஊறாத முன்னர் எனக்குத் தமிழ்க் காவியங்கள் வழங்கிய காட்சி ஒரு விதம்; ஊறிய பின்னர் வழங்கிய காட்சி வேறுவிதம்..”*

தமிழ் மொழியைத் தவிர பிற மொழிகளை ஏன் கற்க வேண்டும்? கூடாது, கூடாது! அது நம் தாய்மொழிக்கு இழிவு செய்வதாகும் என்று வாதிட்டுப் போரிடும் இக்காலத்திலே, அந்தப் பிரச்சினைக்கு திரு. வி. க என்ன தீர்வு கூறுகிறார் பார்ப்போமா?

மணிவிழா முடிவுரை: பிணக்கு ஏன்?

‘வடமொழி தென்மொழிப் பிணக்கு நாட்டில் எழும்பியுள்ளது. அப்பிணக்கு இப்பொழுது பொது மக்களிடை பரவி வருகிறது.’

  • வாழ்க்கைக் குறிப்பு, பக். 116.

115