பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வடக்கு மொழி வடமொழி என்றும், தெற்கு மொழி தென்மொழி என்றும் பொருள் வழங்கப் படுகின்றன. எனக்குத் தோன்றும் பொருள் வேறு. வடமொழி ஆலமரத்து மொழி என்றும், தென்மொழி அழகும் இனிமையும் பொருந்திய மொழி என்றும் எனக்குத் தோன்றுகிறது.’

‘வடமொழியும் நமது நாட்டு மொழி-தென் மொழியும் நமது நாட்டு மொழி என்பது என் கருத்து. எல்லாத் தாய் மார்கட்கும் ஒரு நா; நம் தாய்க்கு இரண்டு நா.’

“தமிழர் ஒரே மொழி பயிலல் வேண்டும் என்னும் நியதி இல்லை; பல மொழி பயிலலாம்; தமிழுடன் வடமொழி பயிலலாம்; அராபி பயிலலாம்; ஆங்கிலம் பயிலலாம்; பிரெஞ்சு பயிலலாம்: லாத்தீன் பயிலலாம்; பிறவும் பயிலலாம். பல மொழிப் பயிற்சி, தாய்ம்ொழிக்கு ஆக்கந் தேடுவதாகும். நச்சினார்க்கினியர் வடமொழி பயின்ற தமிழர். அவர் உரையில் தமிழ் மணங்கமழ்தல் கண்கூடு. பரிமேலழகர் வடமொழியில் பெரும் புலவர், அவர் உரைக்கண் தமிழ்த்தாய் கூத்தாடுதல் வெள்ளிடை D65*6), சிவஞான முனிவர் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் உண்ட பெருங் காளமேகம். அவர் உரை நடையில் தமிழ் அன்னையின் திருவோலக்கம் புலப்படுகிறது. என்முன் வீற்றிருக்கும் மீனாட்சி சுந்தரனார் பல மொழிப் புலவர். அவர்தம் பல மொழிப்புலமை தமிழுக்கு எவ்வளவு நலஞ் செய்கிறதென்பது நமக்குத் தெரியும். ஆதவின் வடமொழி பயின்றால் தமிழ் மாண்டா போகும்? தமிழ் ஆற்றலில்லாத மொழியா? தமிழ் கன்னியாயிற்றே. வட் மொழியும் பயிலலாம்; பிற மொழியும் பயிலலாம். தமிழ் மொழியின் செழுமையை மட்டுங் காத்தல் வேண்டும். தாய் மொழி நலம் பேணிப் பல மொழி பயில்வதை ஒரு கடமை யாகவுங் கொள்ளலாம். அதனால் தமிழ்த்தாய்க்குக் கேடு நேராது. நேருமாயின், தமிழ் வீரம் வாளா கிடக்குமோ? ஆகவே வடமொழி மீது காழ்ப்புக் கொள்ளாது தமிழுக்கு ஆக்கந் தேடலாம்.*

  • வாழ்க்கைக் குறிப்பு, பகுதி II, பக். 976,

1 s 6