பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து’

-திருக்குறள் திரு.வி.க வாழ்க்கைக் குறிப்பிலே என்ன காண்கிறோம்? அவர் பரந்த மனத்தைக் காண்கிறோம். பிறரைப் பாராட்டும் பெருந்தன்மையைக் காண்கிறோம். தம்மைப் பற்றி மட்டுமே பறை சாற்றா சிற்றியல்பினைக் காண்கிறோம். தமக்கு உதவி செய்தவர்; அறிந்தவர் பிரபலமானவர்; தம்மிடம் பயின்றவர் என்ற பாகுபாடு ஏதுமின்றி எல்லோரையும் குற்றங் காணாது குறை கூறாது போற்றியிருப்பதைக் கண்டு எவ்வளவு வியப்படைகிறோம்! தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் முதல் பெரிய அறிஞர் பலர் போற்றப் படுகின்றனர். சாதி, மதம் என்ற வேற்றுமை சிறிதுமின்றி ‘அனைவரும் ஒன்றே!’ என்று போற்றும் அரிய குணத்தைக் காண்கிறோம். அதே சமயம் தம்மிடம் பத்திரிகைத் தொழில் கற்க வந்த உதவி ஆசிரியர்களை அவர் மறந்தாரில்லை. தம்மிடம் உதவி ஆசிரியராகப் பணிபுரிய வந்த இளைஞர்களை அவர் உதாசீனம் செய்யவில்லை; ஒதுக்கவும் இல்லை; எள்ளியாடவும் இல்லை. இத்தகைய பெரிய மனம் திரு.வி.க அன்றி வேறு யாருக்கு வரும்?

‘’ நவசக்தி'யை மீண்டும் வாரப் பதிப்பாகவே தாண்டவம் புரியச் செய்தேன். அப்பொழுது நவசக்தி” ஆசிரியக் கூட்டத்தில் சக்திதாஸ் சுப்ரமன்னியமும், நேமம் கிருஷ்ணசாமியும் சேர்ந்தனர். கிருஷ்ணசாமி மீண்டும் பள்ளிக்குச் செல்ல நவசக்தி'யினின்று விலகினார். இராம நாதனும் அரங்கசாமியும் வந்தனர். ‘நவசக்தி சமதர்ம சன்மார்க்க மயமானாள். எனது நீண்ட கால விருப்பம் ஒருவாறு நிறைவேறியது, காங்கிரஸ் மந்திரிசபை அமைந்த சமயத்தில், நவசக்தி’ நல்ல தொண்டு செய்தாள்.’

‘இராமநாதன் சமதர்மத் தொண்டுக்கென்று இலங்கை நோக்கினார்.”*

  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்பு, பக். 295. A 440-8 1 1 7