பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'துரத்துக்குடி மாசிலாமணிப் பிள்ளை ஒரு தீர்மானத்தை எடுத்துப் பேசிய போது இடையில், ‘பிராமணக் குறும்பு’ என்றொரு சிறு பாணம் பெய்தார். அஃது இராமசாமி நாயக்கரைப் புண்படுத்தியது. அந்நாளில் நாயக்கருக்கு வ கு ப் பு வா த ம் நெருப்பாயிருந்தது. இப்பொழுதோ?*

இது நடந்தது 1922 ஆம் ஆண்டு துரத்துக்குடி மகாநாட்டில்.

கலங்காத நெஞ்சம்

மற்றுமோர் சுவையான நிகழ்ச்சி:

8. 3. 1924 ஆம் ஆண்டு மந்தை வெளியில் நாயக்கர் ஒரு சொற்பொழிவாற்றினார். இராச நிந்தனை என்று கைது செய்யப்பட்டார், வழக்கு நடந்தது. ஓரிரவு. இராயப்பேட்டையில் குகானந்த நிலையத்தில் நாயக்கர் ஒரு திண்ணையில் துரங்கினார். மற்றொரு திண்ணையில் திரு. வி. க உறங்கினார்.

திடீரென இரவு பதினொரு மணிக்கு மழை தொடங்கியது.

திரு வி.க எழுந்தார்; நண்பரை எழுப்பினார்; புரட்டினார்; பெரியார் கண் விழிக்கவேயில்லை. மழையிலே ஆழ்ந்த தூக்கம். ஒரு மணி நேரமா? இரண்டு மணி நேரமா? இல்லை, இல்லை! ஐந்து மணி நேரம் அவர் அப்போதிருந்த சங்கடமான சூழ்நிலை யாது? மிகவும் கொடுமையான 124-ஏ சட்டப்படி வழக்கு நடந்துக் கொண்டிருந்த காலம். அக்கலக்கமான சூழ்நிலையிலும் நாயக்கர் மனங்கலங்கவில்லை.

  • திரு.வி.க-வாழ்க்கைக் குறிப்பு, பக். 347,

I 30