பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது எதைக் காட்டுகிறது. திரு.வி.கவின் சமநோக்கைப் பறைச் சாற்றுகிறது. “சமநோக்கு எளிதோ?

அத்துடனா?

வைக்கம் வீரரைப் புகழவும் புகழ்ந்தார், திரு.வி.க.

‘வைக்கம்வீரர்'க்குப் பலதிற அணிகளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம். 1920 ஆம் ஆண்டிலே சென்னையில் கூடிய மகாநாடொன்றுக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் இராமசாமி நாயக்கரும் போந்தனர். இருவரும் இராயப்பேட்டை “பவானி பாலிக பாடசாலை'யில் தங்கினர்; இரவில் டாக்டர் சுருட்டுப் பிடித்தனர்; நாயக்கர் சிகரெட் பிடித்தனர். இரண்டு புகையும் என்னை எரித்தன. சிகரெட்டை விட வேண்டுமென்ற உறுதி நாயக்கருக்கு எப்படியோ உண்டாயிற்று. சிகரெட் பயிற்சி நாயக்கரை விட்டு ஓடியது, வைராக்கியம் என்ன செய்யாது.”

இராமசாமி நாயக்கர் புலால் உண்பவர். அவ்வுணவை அவர் அவசியமாகவுங் கொள்ளவில்லை; அநாவசியமாகவுங் கொள்ளவில்லை. நாயக்கரும் யானும் பலப்பல நாள் பலப்பல இடங்கள் சுற்றியுள்ளோம், வீரர் மனம் புலால் மீது சென்றதே இல்லை. அவர் புலால் உண்பதை என் கண் இன்னுங் கண்டதில்லை.*

நாயக்கர் பெயர் சொன்னாலே அவர் சாதி வெறி கொண்டவர் எனத் துாற்றுவோர் பலர். தமிழ் முனிவரின் கருத்து என்ன?

“நாயக்கர் சாதி வேற்றுமையை ஒழித்தவர்; அதை நாட்டினின்றும் களைந்தெறிய முயல்பவர். சாதி வைதிகர்

  • வாழ்க்கைக் குறிப்பு, பக். 436. * வாழ்க்கைக் குறிப்பு, பகுதி I, பக், 437.

1 22