பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவரேனும் நாயக்கர் வீட்டுக்குப் போதருவரேல், அவர் கருத்து வழியே நடந்து அவருக்கு வேண்டுவ செய்வர். இதை யான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.” கல்லும் கரைந்தது:

அஞ்சா நெஞ்சம் படைத்த வைக்கம் வீரர் அழுதார்! நாயக்கராவது அழுவதாவது? அழுதார்! இது உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை!!!

1942 ஆம் ஆண்டு. ஜெனரல் ஆஸ்பத்திரியில் இராமசாமிப் பெரியார் படுக்கையில் படுத்திருந்தார். அவரைக் காண சர்க்கரைச் செட்டியாரும், சண்முகாநந்த சாமியும், சானகிராம பிள்ளையும், திரு. வி. கவும் சென்றனர்.

‘யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமையுடையவர். போரிட்டவர் நாயக்கர் கண்கள் ஏன்முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் நாயக்கர் அழுதார் இல்லை, இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது?’ என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது’’

அழுகைக்கு காரணம் என்ன?* எல்லாம் நன்மைக்கே

‘'காஞ்சி மகாநாட்டிலே நாயக்கருக்கும் எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் குடியரசு’ எய்த சொல்லம்புகள் பொறுமையை என்பால் நிலை பெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணைச் செய்தவர் நண்பர் நாயக்கர்.*

  • அரசியல்-பக், 438 - திரு. வி. கவின் வாழ்க்கைக்

குறிப்புகள் ** திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புக்கள், பக். 438. * அரசியல், பக், 437-திரு.வி.க வாழ்க்கைக் குறிப்பு

&ff.

1 2 3