பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏன்?

ருக்மிணி அம்மையார் பிராம்மணர். அருண்டேல் வெள்ளையர்:

நிறம் என்ன செய்யும்?

அவ்விருவரின் குருதியின் திறம் ஒன்றே அல்லவோ?

அவர் ஆதரித்த மணங்களுள் குறிப்பிடத் தக்கன இரண்டு. ஒன்று சச்சிதானந்தம் பிள்ளையின் மகனின் திருமணம்.

மற்றொன்று பேராசிரியர் அ. ச. ஞானச்ம்பந்தரின் மணமும் ஆகும். -

இவர் நிகழ்த்திய கைம்மை மணங்களும் பல. பலப்பல! திரு.வி.க. போற்றிய பெண்கள்

பெண்கள் சீர்திருத்தங்களுக்கு அறைகூவி அழைத்த பெண்மணிகளை தமிழ் அண்ணல் மறந்தாரில்லை. சீர்திருத்த மேடையில் சூறாவளி பிரசாரம் செய்த வீராங்கனை அலர்மேல் மங்கையை எவ்வளவு புகழ்ந்துள்ளார்.

கல்வி கேள்விகளிற் சிறந்தோரை மட்டும் போற்ற வில்லை தமிழ்த்தென்றல், அன்னி பெஸன்ட் அம்மையாருடன் அசலாம்பிகை அம்மையாரும் போற்றப் படுகிறார். தமக்குப் பாடம் சொன்ன அன்னபூரணி அம்மையாரை கல்யாண சுந்தரனார் ஏற்றி போற்றியிருக்கிறார். பட்டம் பதவி பெற்ற E. 1. சொக்கம்மா, இராஜேஸ்வரி அம்மையார், கிருஷ்ணவேணி அம்மையார், E. T. பத்மாவதி அம்மையார் ஆகிய அனைவருமே அவர்தம் வாழ்க்கைக் குறிப்பில் இடம் பெறுகின்றனர். -

இல்லத்தரசிகளுக்கும் தனிச் சிறப்பு நல்கியிருக்கிறார் தமிழ்க்கடல், திருவண்ணாமலை மகாநாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற நாகம்மை; மூவலூர் இராமாமிருதம் அம்மையார்:

126