பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாலோர் தொழிலாளர்களே. அவர்களே இக்கூட்டங் களை நடத்தினர் என்றால் மிகையாகாது.

இங்கே சொற்பொழிவாற்றினார் தமிழ்த் தென்றல்.

தமிழாசிரியர் பதவி விடுத்து தேச பக்த'னின் ஆசிரியப் பீடத்தில் அமர்ந்தார் திரு.வி.க. திவான் பகதூர் கேசவப் பிள்ளையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் பெற்றார்.

கேசவப் பிள்ளை மில் தொழிலாளர் குறைகள் பற்றி கட்டுரைகள் பல எழுதி வந்தார். இவை ஆங்கில பத்திரிகை ‘இந்தியன் பேட்ரியட்'டில் வெளி வந்தன.

அவைகளில் சிலவற்றை தமிழில் மொழி பெயர்த்து ‘தேசபக்தனில் வெளியிட்டார் திரு.வி.க.

தொழிலாளர் இயக்கத்துக்கு வித்து

1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை ஜங்காராமியம்மாள் பங்களாவில் வெங்கடேச குணாமிர்த வர்ஷணி சபை சார்பில் ஒரு கூட்டம் கூட்டப் பட்டது.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் கூடியிருந்தனர். திரு.வி.க இ க் கூ ட் ட த் தி ல் மேற்கு நாட்டில் தொழிலாளர் இயக்கம் தோன்றிய வரலாற்றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும் விவரித்தார். தொழிற்சங்க இயக்கம் ஒவ்வொரு நாட்டிற்கும் மிக்க அவசியம் என்று வலியுறுத்தினார்.

தொழிலாளர் உற்சாகம் கொண்டனர்; அது கரை புரண்டோடியது. தொழிலாளர் சங்கம் எப்போது அமைக்கப் படும் என்று ஆவலோடு கேட்கவாரம்பித்தனர்.

கேசவப் பிள்ளையை தொழிற் சங்கம் அமைக்க வேண்டினார் திரு.வி.க.

129