பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கத்திற்கு எதிர்ப்பு

தொழிற் சங்கம் பிறந்தது. சில வாரங்களுக்குள் எதிர்ப்புக்களும் பாய்ந்து வந்தன. சென்னை கவர்னர் லார்ட் பெட்லண்ட், வாடியாவை கடுமையாக எச்சரித்தார், பத்திரிகைகளும் முதலாளிகளையே ஆதரித்தன. எல்லா வற்றிற்கும் மறுப்புத் தந்தவர் ஒருவரே. அவரே தொழிற் சங்கத் தளபதி திரு.வி.க

‘நியூ இந்தியா’ பத்திரிகையும் அவருக்கு ஆதரவு நல்கியது.

தொழிற் சங்கங்களில் சமதர்ம உணர்ச்சி

ஆரம்ப காலத்திலே தொழிற் சங்கக் கூட்டங்களில் பெரும்பாலும் சம்பள உயர்வு, வேலை நேரக் குறைப்பு, தொழிலாளர் கல்வி, சுகாதாரம் ஆகியனவே பெரும்பாலும் பேசப்பட்டன. இச்சங்கங்களில் பொருளாதார சமதர்ம உணர்ச்சியை ஊட்டியவர் ஒரிருவரே. அவர்களுள் முதன்மை யானவர் திரு.வி.க.

மத்திய மைய சங்கம்

1920 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி முதல் முறையாக மாகாணத் தொழிலாளர் மகாநாடு கூடியது. மகாநாட்டில், ‘எல்லா தொழிசங்கங்கட்கும் மையமாக ஒரு மத்தியச் சங்கம் இருத்தல் வேண்டும். அச்சங்கத்தில் எல்லாத் தொழிற்சங்கங்களும் சேர்தல் வேண்டும்’ என்று கூறினார் திரு வி.க.

விளைவு?

அதே ஆண்டு ஜூலை நாலாம் தேதி மத்திய சங்கம் சென்னையில் தோன்றியது. அதன் தலைவராகத் திரு.வி.க தேர்ந்தெடுக்கப் பட்டார்.

I 3 I